3624 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்
16 Nov 2025, 3:30 pm
<p><strong>3624 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல்</strong></p>
<p>உதகை, நவ.16- நீலகிரி மாவட்டத்தில் 2021 - 2026 வரையிலான கல்வியாண்டில் மொத்தம் 3,624 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டதாக அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தெரிவித்தார். உதகை சி.எஸ்.ஐ. ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 109 மாணவிகளுக்கு ரூ.5.18 லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா முன்னிலை வகித்தார். அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் தலைமை வகித்து மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கினார். இதன்பின் அவர் பேசுகை யில், பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார். பள்ளிக்கு வரும் குழந்தைகள் பசியின்றி வரவேண்டும் என்பதற்காக காலை உணவுத் திட்டம், பள்ளிக் கல்வித் துறை சார்பில் விலையில்லா சீருடைகள், நோட்டுப் புத்த கங்கள் ஆகிய திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி யுள்ளார். நீலகிரி மாவட்டத்தில், 2021 - 2026 வரையி லான கல்வியாண்டுகளில் மொத்தம் 3,624 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.74 கோடி மதிப்பீட்டில் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன, என்றார். இந்நிகழ்ச்சியில், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கணேஷ், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திருநா வுக்கரசு, மாவட்டக் கல்வி அலுவலர் சின்னமாது உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
