தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

29 Jan 2026, 5:39 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

571 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்

திருப்பூர், ஜன.29- திருப்பூர் மாவட்டம், முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் காங்கேயம், படியூர், நத்தக்காடையூர்,  கார்மெல் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு பயி லும் 571 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.27.47 லட்சம் மதிப்பீட் டில் விலையில்லா மிதிவண்டிகள் தமிழ் வளர்ச்சி மற்றும்  செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வியாழனன்று வழங்கினார். மேலும், சின்ன முத்தூரில் தமிழ்நாடு வாணிபக்  கழகம் சார்பில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் நெல் கொள்முதல் செய்யும் பணிகளை துவக்கி வைத்து, ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் துணை வேளாண்மை விரி வாக்க மையக்கட்டடத்தை திறந்து வைத்தார். அத்துடன் காங் கேயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மற்றும்  காலநிலை மாற்ற துறையின் சார்பில் காலநிலை மாற்றம்  சார்ந்து இளைய தலைமுறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்தும் விதமாக பசுமைப் பள்ளி திட்டத்தை துவக்கி வைத்தார்.

திருப்பூரில் பிப்.1இல் குடிநீர் நிறுத்தம்

திருப்பூர், ஜன. 29 - திருப்பூர் மாநகராட்சியில் 2வது, 3வது மற்றும் 4வது  குடிநீர் திட்டங்களின் மூலம் குடிநீர் பெறப்பட்டு வருகிறது.  ஜன. 31 அன்று மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில்  மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தலைமை நீரேற்று நிலையத்தில் 4 ஆவது குடிநீர்  திட்டத்தில் நீருந்து பணிகள் மேற்கொள்ள இயலாது. எனவே,  பிப்.1ஆம் தேதி ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் தடை படும் என மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் தெரிவித் துள்ளார்.

பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலத்தை பாதுகாக்க  ஆலாம்பாளையம் மக்கள் ஆட்சியருக்கு மனு

உடுமலை, ஜன.29– ஆலாம்பாளையம் கிராமத்தில் நத்தம்புறம்போக்கு நிலம்  ஆக்கிரமிக்கப்படாமல் தடுக்க ஊராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு  அமைத்து மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும் என  கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலாம்பாளையம் ஊராட்சியில், குருவப்பநாயக்கனுார் செல்லும் வழித்தடத் தில், நத்தம்புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை அனைத்து சமுதாய கிராம மக்கள் தங்களது பொது பயன்பாட் டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். அங்குள்ள பொதுக்கிண றும் மக்கள் பயன்பாட்டில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்  நத்தம் புறம்போக்கு நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சி செய்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள், உடுமலை வரு வாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதை தொடர்ந்து அலுவலர்கள் ஆய்வு செய்து, நத்தம்புறம் போக்கு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுத்தனர்.  இந்நிலையில், மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலம் ஆக்கிர மிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என ஆலாம்பாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்த னர். அந்த மனுவில், நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டி லுள்ள நத்தம்புறம் போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்படாமல் தடுக்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். காலியிடத்தில் தடுப் புகளை ஏற்படுத்தி, மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும்.  பொதுக்கிணற்றை சுற்றிலும் தடுப்பு அமைக்க வேண்டும் என  அம்மனுவில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து திருப்பூர்  மாவட்ட ஆட்சியருக்கு வியாழனன்று மனு அனுப்பட்டுள் ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.