முந்தய பக்கம்

பள்ளத்தூர் அரசுப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

3 Dec 2025, 2:59 pm
பள்ளத்தூர் அரசுப் பள்ளியில்  விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
<p><strong>பள்ளத்தூர் அரசுப் பள்ளியில் &nbsp;விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா</strong></p> <p>தஞ்சாவூர், டிச.3 - தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) காமாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் 92 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் திமுக வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ஞானப்பிரகாசம், பொதுக் குழு உறுப்பினர் அ.தனபால், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கூத்தலிங்கம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஜெய பாரதி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கள் சாமிக்கண்ணு, ஜெயபால், அருணாச் சலம், ஓய்வுபெற்ற துணை வட்டாட்சியர் பால கிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். &nbsp;திறனறித் தேர்வு மற்றும் கல்வியில் தனித்திறன் பெற்ற யாழினி, தேவிகா, பிரியதர்ஷினி, மிதுன் உள்ளிட்ட மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து சட்ட மன்ற உறுப்பினர் வாழ்த்தினார். &nbsp;முன்னதாக ஆசிரியை சங்கீதா வரவேற்றார். ஆசிரியர் அமிர்தலிங்கம் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram