செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்
8 Jul 2026, 11:00 pm
<p><strong>செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்</strong></p><p>கிருஷ்ணகிரி, ஜூலை 8- ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், நோயாளி களின் நலன் கருதி இலவச ஆம்புலன்ஸ் சேவை புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இந்தச் சேவையை மருத்துவக் கல்லூ ரியின் தாளாளர் மருத்துவர் லாசியா தம்பி துரை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் ஜான் ராஜபதி, மருத்துவக் கண்காணிப்பாளர் கிரீஸ் ஓங்கல், இருப்பிட மருத்துவ அலுவலர் பார்வதி, இணை மருத்துவக் கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் மருத்துவர் அர்ஜுன் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவை குறித்த விவரங்கள் இந்த ஆம்புலன்ஸ் சேவை மருத்துவ மனையைச் சுற்றியுள்ள 30 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்துக் கிராம மற்றும் நகர்ப்புற நோயாளிகளுக்கும் பயன்படும். நோயாளி அவசரத் தேவைக்கு 04344-261261 என்ற எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இலவசமாக இயக்கப்படும் இந்த ஆம்பு லன்ஸ் சேவை, அவசர சிகிச்சைக்குத் தேவைப்படும் நோயாளிகள் விரைவாக மருத்துவமனைக்கு வந்து சேர பெரிதும் உதவியாக இருக்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>
