ஆதாரை இலவசமாக புதுப்பிக்க அவகாசம்!
19 May 2026, 9:29 pm
<p><strong>ஆதாரை இலவசமாக புதுப்பிக்க அவகாசம்!</strong> </p><p>சென்னை, மே 19 - 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் எடுத்து இதுவரை எந்த மாற்றமும் செய்யாதவர்கள், தங்களது ஆவணங்களை புதுப்பிக்குமாறு யுஐடிஏஐ தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன்படி ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்கும் வசதிக்கான கால அவகாசத்தை ஒன்றிய அரசு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, பொதுமக்கள் தங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்களில் மாற்றம் இருந்தால், https://myadhaar.uidai.gov.in என்ற இணையதளம் மூலமாக ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம். முன்னதாக, இந்தச் சலுகை வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது அது 2027 ஜூன் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் புதுப்பிப்பதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால் ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று விவரங்களை மாற்ற விரும்புவோர் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும். </p>
