முந்தய பக்கம்

வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி

14 Nov 2025, 1:26 pm
வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி
<p><strong>வேலை வாங்கித் தருவதாகக்கூறி மோசடி</strong></p> <p>நாமக்கல், நவ.14- வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவ தாகக்கூறி, நாமக்கலில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ரூ.18.92 லட்சம் மோசடி செய்துள்ளதாக, மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் இளைஞர் புகார் அளித்துள்ளார். திருச்சி மாவட்டம், பொன் நகர், கருமண் டபத்தைச் சேர்ந்த முகம்மது சலீம் என்பவரின் மகன் முகம்மது பாசில் ஷா (22). இவர் &nbsp;நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, பொறியியல் பட்டம் பெற்றுள்ள &nbsp;நான், நாமக்கல்லில் உள்ள தனியார் நிறுவ னம் வெளி நாடுகளில் வேலை வாங்கித் &nbsp;தருவதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிந் தேன். சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தின் உரி மையாளர் தங்கராசு என்பவரை, கடந்தாண்டு ஜூலை 17 ஆம் நேரில் சந்தித்தேன். அப்போது, மென் பொறியியாளர் வேலை வாங்கித் தரு வதாகவும், அதற்கு ரூ.19 லட்சம் செலவாகும் எனவும், அங்கு சென்று வேலை செய்தால் மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கலாம் என வும் கூறினார். &nbsp;இதனை நம்பி தவணை முறையில் ரூ.19 லட்சத்தை வழங்கினேன். ஒரு மாதத்திற்குள் வெளிநாடுக்கு அனுப்பி வைப்பதாக கூறி வந்தார். அதன்பிறகு, அவரை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் முடிய வில்லை. நாமக்கல் அலுவலகத்தில் சென்று &nbsp;பார்த்தபோது, அடிக்கடி தொந்தரவு செய் தால் உன்னுடைய பாஸ்போர்ட்டை முடக்கி &nbsp;விடுவேன் என மிரட்டினார். ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை நான் கொடுத்த ரூ.18.92 லட்சம் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை. உரிய விசாரணை மேற் கொண்டு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தி டம் இருந்து காவல் துறை பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது. &nbsp;இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், முகமது பாசில்ஷா &nbsp;தான் கொடுத்த பணத்தை திரும்ப பெற்று தர &nbsp;வேண்டும் என வலியுறுத்தியும், சம்பந்தப் பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்த நிறுவனத்தின் முன்பு புத னன்று தர்ணாவில் ஈடுபட்டார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram