வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி: குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
26 Mar 2026, 2:46 pm
<p><strong>வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி: குற்றவாளிகளுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை</strong></p>
<p>கோவை, மார்ச் 26- வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சுமார் 600 பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்ற வாளிகள் 5 பேருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.54 லட்சம் அபராதம் விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள் ளது. கோவை காந்திபுரம் பகுதியில் கடந்த 2005-06 காலகட்டத்தில் ”யான்போ அசோசியேட்ஸ்” (Yanbo Associates) என்ற நிறுவ னம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவ னம் லண்டன் உள்ளிட்ட வெளிநாடு களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கவர்ச்சிகரமான விளம்பரங் களை செய்தது. இதனை நம்பி தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங் களைச் சேர்ந்த சுமார் 600 பேர், தலா ரூ.1.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் செலுத்தினர். மூன்று தவ ணைகளாக பணம் செலுத்த வேண்டும் என்றும், இறுதித் தவ ணையின் போது பணி ஆணை மற் றும் விசா வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்திருந் தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் பணம் கொடுத்தவர்கள் நேரில் சென்று பார்த்தபோது, அலுவல கத்தை பூட்டிவிட்டு அந்த கும்பல் தலைமறைவானது தெரியவந்தது. இது குறித்து கோவை காட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த 2012-ஆம் ஆண்டு இந்த வழக்கு மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (CBI) மாற்றப்பட்டது. சி.பி.ஐ நடத்திய தீவிர விசாரணை யில், மும்பையைச் சேர்ந்த பி.சி. செரியன், ரமேஷ் பாபு, பிரான்சிஸ் அருண், சயின், ஆஷா சார்லெட், பெஞ்சமின் வில்லியம், சந்தோஷ் வில்லியம் மற்றும் பிரீத்தா குமாரி ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடமிருந்து 450 கிராம் தங்க நகைகள், ரூ.5 கோடி மதிப் பிலான அசையா சொத்துகள் மற் றும் ரூ.1 லட்சம் வைப்புத் தொகை ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டன. கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், மொத்தம் 130 சாட்சிகள் விசாரிக்கப் பட்டு, 518 பக்க ஆவணங்கள் தாக் கல் செய்யப்பட்டன. வழக்கின் விசா ரணை காலத்தில் ரமேஷ்பாபு, சயின் மற்றும் பெஞ்சமின் ஆகிய மூவர் உயிரிழந்தனர். இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணையை முடித்து நீதிபதி சிவக்குமார் வியாழனன்று தீர்ப்ப ளித்தார். அதில், முக்கிய குற்ற வாளிகளான பி.சி.செரியன், பிரான் சிஸ் அருண், ஆஷா சார்லெட், சந் தோஷ் வில்லியம் ஆகிய நான்கு பேருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், மொத்தம் ரூ.52 லட்சம் அபராதமும் விதிக் கப்பட்டது. மற்றொரு குற்றவாளி யான பிரீத்தா குமாரிக்கு 4 ஆண்டு கள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், குற்ற வாளிகளிடமிருந்து வசூலிக்கப்ப டும் அபராதத் தொகை மற்றும் பறி முதல் செய்யப்பட்ட சொத்துக் களை ஏலம் விட்டு கிடைக்கும் தொகையை பாதிக்கப்பட்ட 600 பேருக்கும் பிரித்து வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.</p>
