தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி

22 Dec 2025, 4:02 am
ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி
<p>சேலம், டிச 22- ஏலச்சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபர் மீது நட வடிக்கை எடுக்க கோரி பாதிக்கப் பட்டவர்கள் சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தை திங்களன்று முற் றுகையிட்டனர். சேலம் மாநகர் சரஸ்வதிப்பட்டி பெருமாள் மலை ரோடு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அதே பகுதியில் பல ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில், அதே பகுதியைச் சேர்ந்த சுமார் 400க் கும் மேற்பட்டோர் ரூ.50 ஆயிரம் முதல் &nbsp;ரூ.5 லட்சம் வரை ஏல சீட்டு மூலம் &nbsp;பணம் செலுத்தி வந்துள்ளனர். &nbsp;இந்நிலையில் பலரும் சீட்டு முடிந்து பணத்தை கேட்கச் சென்ற போது பணம் தராமல் பழனிச்சாமி முன்னுக்கு பின் முரணாக பேசி மிரட் டல் விடுத்துள்ளார். மேலும் முதலீடு செய்த அனைவரும் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீட்டிற்கு சென்ற போது அவர் குடும்பத்துடன் தலை மறைவாகியுள்ளதாக கூறப்படு கிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திலும், பொருளாதார குற்றப்பிரிவு அலுவல கத்திலும் புகார் அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் புகாரை வாங்க &nbsp;மறுத்து விட்டதாக பாதிக்கப்பட்ட வர்கள் குற்றம் சாட்டி திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், ஏலச்சீட்டில் பலரும் முதலீடு செய்துள்ளதாகவும், சுமார் 20 கோடி &nbsp;ரூபாய்க்கு மேல் ஏலச்சீட்டு மூலம் &nbsp;பழனிச்சாமி மோசடியில் ஈடுபட்டுள் ளார் என குற்றம் சாட்டினர். மேலும் &nbsp;பழனிச்சாமி அவர்களது மகள்க ளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்து சொகுசு கார் மற்றும் தங்க நகைகளை சீர்வரிசையாக கொடுத்துள்ளார். ஆனால் தங்க ளுக்கு பணம் கொடுக்காமல் தலை மறைவாகியுள்ளதாகவும், உடனடி யாக பழனிச்சாமியை கைது செய்து &nbsp;தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.</p> <p><strong>வேலைவாங்கித் தருவதாக மோசடி</strong></p> <p>ஈரோடு வாணியப்பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோ. மலர்கொடி (62). இவரிடம் இவரது மகன் மோகனுக்கு (37) வேலை வாங் கித்தருவதாக ஈரோடு மாநகராட்சி 42 ஆவது வார்டு உறுப்பினர் மேனகா நடேசன் மற்றும் மாருதி நகரில் வசித்து வரும் கதிரவன் என்பவரும் ரூ.5 லட்சம் பணம் பெற்றனர். அதன்படி ரேசன் கடையில் வேலை வாங்கித்தரவில்லை. எனவே கொடுத்த பணத்தை திரும்பக் கேட் டேன். கதிரவன் என்பவர் ரூ.5 லட்சத் திற்கான காசோலையை தந் தார். இந்தியன் வங்கியின் காசோலை யான அதனை ஈரோடு கூட்டுறவு அர் பன் வங்கியில் தாக்கல் செய்தேன். &nbsp;ஆனால் காசோலை திரும்ப வந்து விட்டது. எனவே முதலமைச்சர் தனி &nbsp;பிரிவில் புகார் செய்தேன். அதன் பிறகு கவுன்சிலர் வழக்கறிஞருடன் நகர காவல் நிலையத்திற்கு வந்து &nbsp;கடந்த செப்டம்பர் 20ஆம் தேதிக்குள் &nbsp;பணத்தைக் கொடுத்து விடுவதாக எழுதிக் கொடுத்து சென்றார். ஆனால் &nbsp;நாளது தேதி வரை பணம் தரவில்லை. &nbsp;எனவே கடன் வலையில் சிக்கி தவித்து வரும் நான் இழந்த பணத்தை &nbsp;பெற்றுத்தருமாறு மாவட்ட ஆட்சியரி டம் அளித்த மனுவில் தெரிவித்துள் ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.