ஏல சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி
15 Dec 2025, 2:48 pm
<p><strong>ஏல சீட்டு நடத்தி பல கோடி ரூபாய் மோசடி</strong></p>
<p>சேலம், டிச.15- நரசோதிப்பட்டி குரங்கு சாவடி பெருமாள் மலை ரோடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திங்களன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அம்மனுவில், சேலம் நர சோதிப்பட்டி பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசித்து வருகின்றன. அதே பகுதி யில் பழனிச்சாமி மற்றும் மகேந்திரன் ஆகிய இருவரும் ஏல சீட்டு நடத்தி வந்தனர். அவர்கள் பல ஆண்டு காலமாக அந்த பகுதி யில் இருந்து வருவதால் அவர்களை நம்பி பலர் ஏலச்சீட்டில் சேர்ந்தோம். ரூ.50 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.5 லட்சம் என பல்வேறு சீட்டுகளில் 400க்கும் மேற்பட் டோர் சேர்ந்து மாதம் பணம் கட்டி வந்தோம். இந்நிலையில் சீட்டு முடிந்து பணத்தை கேட்க சென்றபோது பணம் தராமல் முன்னுக்கு பின்னாக முரணாக பேசி மிரட்டல் விடுத்த னர். இதையடுத்து ஏல சீட்டு பணம் முதலீடு செய்தவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீட்டுக்கு சென்றபோது அவர் வீட்டை விட்டு வெளியே சென்று தலைமறைவாகிவிட்டார். மகேந்திரனிடம் கேட்டதற்கு எனக்கும் ஏலச்சிட்டிருக்கும் சம் பந்தமில்லை எனக் கூறி அனுப்பி விட்டார். சுமார் 400 பேர் ஏலச்சீட்டில் பணம் முதலீடு செய்து இதுவரை ரூ.15 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. எங்கள் வாழ்வாதாரத்திற்காக சிறுக சிறுக சேமித்த பணத்தை பழனிச்சாமி ஏமாற்றி விட்டார். இதனால் எங்கள் வாழ்க்கை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் இது குறித்து உரிய விசாரணை நடத்தி எங்கள் பணத்தை மீட்டு தர வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.</p>
