முந்தய பக்கம்

பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல்!

6 Oct 2026, 9:33 pm
பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல்!

பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல்!

ஸ்டாக்ஹோம்2026ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் திங்களன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, திங்களன்று அமெரிக்கா மற்​றும் ஜெர்​மனியை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு மருத்​து​வத்​துக்​கான நோபல் பரிசுஅறிவிக்கப்பட்டது. தொடர்ந்து செவ்வாயன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவில் பணிபுரியும்பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 82 வயதான மூத்த விஞ்ஞானி பிரான்சிஸ் லூயிஸ் ஹால்சனுக்குஅறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டவெளியில் நிகழும் விண்வெளி நிகழ்வுகளிலிருந்து வெளியாகும் உயர் ஆற்றல் கொண்ட ‘நியூட்ரினோ’ துகள்களைக் கண்டறிந்ததற்காகவும், ‘ஐஸ்கியூப் நியூட்ரினோ ஆய்வகத்தை’ அமைப்பதில் முதன்மைப்பங்காற்றியதற்காகவும் அவருக்கு இந்த உயரிய விருது வழங்கப்படுகிறது.

பிரான்சிஸ் ஹால்சன் முற்றிலும் புதியவகை வானியல் ஆய்வுக்கான அடித்தளத்தைஅமைத்துள்ளார். பூமியின் தென் துருவத்தில் உள்ள பனிப்பாறைகளைப் பயன்படுத்தி, ‘நியூட்ரினோக்கள்’ எனப்படும் மர்மத்துகள்களைப் பிடிப்பதே அவரது திட்டமாக இருந்தது. இதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘ஐஸ்கியூப் நியூட்ரினோஆய்வகம்’ ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram