தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

13 Jul 2026, 9:50 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

இறுதிக்கு முன்னேறுவது யார்? முதல் அரையிறுதியில் பிரான்ஸ் - ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதி ஆட்டங்களின் முடிவில் அர்ஜெண்டினா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இந்திய நேரப்படி செவ்வாயன்று நள்ளிரவில் (ஜூலை 15) நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் பயமறியா இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ளது. அதே போல பலம், பலவீனங்களில் சரிசமமாகவும் உள்ளன. இதனால் யாருக்கு வெற்றி, தோல்வி என திடமாக கணிப்பு கூற முடியாது. எனினும் அதிரடி ஆட்ட செயல்திறனில் பிரான்ஸ் அணி சற்று அசூர பலத்தில் உள்ளது. இதனால் இறுதிக்கு முன்னேற பிரான்ஸ் அணிக்கு 13% கூடுதல் வாய்ப்புகள் உள்ளன.

பிரான்ஸ் - ஸ்பெயின்

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (ஜூலை 15) இடம் : டல்லாஸ், அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

இரு அணிகளின் மாறுபட்ட ஆட்டத்திறன்

பிரான்ஸ்

தற்போதைய பிரான்ஸ் அணி பந்தை வேகமாக கடத்துவதில் மின்னல் வேக வல்லமை கொண்டது. நடுகளத்திலோ, பின்களத்திலோ பந்து கிடைத்தால் அந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மாப்பே, டெம்பேலே ஆகிய இருவரும் 100 மீ ஓட்டப்பந்தயத்தில் ஓடும் வீரர்களை போன்று, ஜெட் வேகத்தில் ‘கோல் கம்பம்’ அருகே கொண்டு செல்லும் திறமை உள்ளவர்கள். அதே போல 4 விங்கர்களும் (பக்கவாட்டில் வேகமாக பந்தை கடத்துதல்) அந்த அணியில் உள்ளனர். குறிப்பாக கோலடிக்க பிரான்ஸ் அணி இறுதி நிமிடம் வரை போராடக்கூடிய மன உறுதியான ஆட்டத்திறன் கொண்ட அணி ஆகும். அதே சமயம் அனைத்து வீரர்களும் தடுப்பாட்டத்தில் திறம்பட செயல்படும் அளவிற்கு ஆல்ரவுண்டர் ஆட்டத்திறனை கொண்ட வீரர்களையும் பிரான்ஸ் அணி கொண்டுள்ளது. கால்பந்து போட்டியில் ஒரு அணி கோலடித்துவிட்டால் அடுத்து தடுப்பாட்டத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிடும். ஆனால் பிரான்ஸ் அணி அர்ஜெண்டினா போல, கோலடித்த அடுத்த நொடியே மீண்டும் கோலடிக்க முயற்சி செய்ய ஆரம்பித்துவிடும்.

ஸ்பெயின்

ஸ்பெயின் அணிக்கு பந்து கிடைத்தால் ஒட்டுமொத்த படையுடன் (11 வீரர்கள்) கோல் கம்பம் நோக்கி அதிவேகமாக செல்லும் அசாத்திய ஆட்டத்திறனை கொண்டது. கோலடிக்க அதீத முயற்சி மேற்கொள்ளும் வியூகம் கொண்டது. எதிரணியின் 9 வீரர்கள் தடுப்பாட்டத்தில் நங்கூரம் அமைத்தாலும், அந்த அணியின் இளம் வீரர் யாமல் பந்தை அசத்தலாக கோல் கம்பம் அருகே எளிதாக கொண்டு செல்வார். பெனால்டி பாக்ஸ் அருகே கோலடிப்பதில் ஸ்பெயின் வீரர்கள் கைதேர்ந்தவர்கள். இதில் முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. ஸ்பெயின் அணி ஒரு கோலடித்தால், அதாவது 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றால் பந்தை தன்னுடைய பையில் எடுத்து வைத்துக்கொள்ளும். அதாவது பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் முழுமையாக கொண்டு செல்லும். அதனால் தான் கால்பந்து உலகில் ஒரு வழக்கு உள்ளது. “ஸ்பெயின் அணியை கோலடிக்க விடாதீங்க தம்பி ; அப்புறம் பந்து நம்மட்ட வராது” என்பது போல தான் ஸ்பெயின் அணி கோலடித்த பின்பு தடுப்புச் சுவர் அமைத்து விடும்.

நாளைய அரையிறுதி ஆட்டம்

அர்ஜெண்டினா - இங்கிலாந்து

நேரம் : புதனன்று நள்ளிரவு 12:30 மணி / இடம் : அட்லாண்டா, அமெரிக்கா

உலகக்கோப்பையில் விளையாடிய 25 வயது தென் ஆப்பிரிக்க வீரர் ஜேடன் ஆடம்ஸ் காலமானார்

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், சமீபத்தில் நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடியவருமான ஜேடன் ஆடம்ஸ் தனது 25ஆவது வயதில் காலமானார். இவருடைய மரணத்திற்கான காரணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. கேப் டவுனில் உள்ள அவரது இல்லத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். எனினும் தென் ஆப்பிரிக்க கால்பந்து வீரர்கள் சங்கம் ஜேடன் ஆடம்ஸின் மரணத்தை உறுதி செய்துள்ளது. சமீபத்தில், நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்கா சார்பாக அவர் மூன்று போட்டிகளிலும் விளையாடினார். உலகக்கோப்பை தொடரின் போது, செக் குடியரசுடனான போட்டிக்கு ஒருநாள் முன்பு அவரது பாட்டி மரியானா காலமானார். அந்தப் பேரிடியிலும் கலங்காமல் ஜேடன் ஆடம்ஸ் நாட்டுக்காகத் தன் கடமையை ஆற்ற களத்தில் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்க தனி ஆள் கிடையாது ; எங்களுக்கும் ரசிகர் மன்றம் இருக்குப்பா! உலகக்கோப்பையை கலக்கும் ‘மெர்லின் வாத்து’

உலகக்கோப்பை கால் பந்து தொடர் விறுவிறுப் பாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகள் கூட்டாக உலகக் கோப்பையை நடத்தினாலும், நாக் அவுட் சுற்றுகள் வரை தான் மெக்சி கோ, கனடா நாடுகளில் போட்டிகள் நடைபெற்றன. காலிறுதி, அரை யிறுதி, இறுதி போன்ற முக்கிய ஆட்டங்களை அமெரிக்கா தான் நடத்தி வருகிறது. உலகக்கோப்பை என்றாலே ரசிகர்களின் ஆரவாரம், வீரர்களின் அதிரடி ஆட்டம் என மைதானமே அதிரும். ஆனால், இந்த விறுவிறுப்புக்கு மத்தியில் செல்லப் பிராணிகளும் கால்பந்து உலகையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. ‘மெர்லின்’ மெக்சிகோவைச் சேர்ந்த 2 வயது வாத்தான மெர்லின், தற்போது உலக கால்பந்து ரசிகர்களின் அன்புக் குரிய அடையாளமாக மாறியுள் ளது. மெக்சிகோ தேசிய அணி ஜெர்சி அணிந்து, ஸ்டைலான காலணிகளு டன் தன் உரிமையாளர் கிறிஸ்டியன் கோமஸுடன் மெக்சிகோ வீதிகளில் வலம் வந்த மெர்லின், அந்நாட்டின் உலகக்கோப்பைத் தூதராகவே அறிவிக்கப்பட்டுள்ளது. மைதானத்திற்குள் விலங்கு களை அனுமதிக்கும் விதிமுறைகள் இல்லாவிட்டாலும், ரசிகர்களின் இத யங்களில் மெர்லின் ஒரு நட்சத்திர மாக அமர்ந்துள்ளது. அதாவது மெஸ்ஸி, நெய்மர், ரொனால்டோ ஆகியோருக்கு ரசிகர் மன்றம் இருப்பது போல, மெர்லினுக்கும் தனி ரசிகர் மன்றம் உருவாகும் அள விற்கு ‘மெர்லின் வாத்து’ பிரபலமாகி விட்டது. மெக்சிகோவில் உலகக் கோப்பை போட்டிகளை காண வந்த உள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் ‘மெர்லினிடம்’ செல்பி எடுக்க கடுமை யான போட்டியில் இறங்கினர். தற் போது மெக்சிகோவில் உலகக் கோப்பை இல்லை என்பதால், மெர்லின் அவர்கள் இரை, உறக்கம் என ஓய்வில் இருக்கிறார்கள்.

ஸ்டைல் ஐகான் ‘ஒசிடோ’

இதே போல 8 வயதுடைய ஒசிடோ எனும் நாய், கால்பந்து போட்டிக்குச் செல்வதில் மனிதர்களுக்கே சவால் விடுகிறது. மெக்சிகோ அணியின் ஜெர்சி, சன்கிளாஸ் (கண்ணாடி), தொப்பி மற்றும் முதுகு பை என முழுத் தயாரிப்புடன் உலகக்கோப்பை போட்டிகளின் போது சைக்கிளில் வலம் வந்த ஒசிடோ, உலகக்கோப்பை தொடக்க விழாவிலேயே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. - எம். சதீஸ் குமார்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.