தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்விச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

1 Oct 2026, 10:06 pm
கல்விச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

கல்விச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம்

பாரீஸ், அக்.1-கல்விச் சூழலை மேம்படுத்த வலியுறுத்தி பிரான்ஸ் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை அந்நாட்டு காவல்துறை மிகக்கொடூரமான முறையில் ஒடுக்கி வருகின்றது. இதனால்வன்முறைகளும் வெடித்துள்ளன.

15 முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் பயிலும் ‘லைசி’ பள்ளிகளில் (மேல்நிலைப்பள்ளி) நிலவும் மோசமான கட்டமைப்பு மற்றும் கற்றல் சூழலே இப்போராட்டத்திற்கு முதன்மை காரணமாகும். பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள்இல்லை; நாடு முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுகிறது, மிக சிறிய அளவில் உள்ள வகுப்பறைகளில் அதிகமாணவர்கள் நெரிசலில் அமர வேண்டியுள்ளது; காலை 8 முதல் மாலை 6 மணி வரை என நெகிழ்வுத்தன்மையற்ற, சோர்வளிக்கும் கால அட்டவணை:இத்தகைய சூழலில் காலநிலை மாற்றத்தால் அதீத வெயில் அல்லது அதிக குளிர் நிலவுகிறது இந்த சூழல்கள்மாணவர்களைக் கொதிப்படையச் செய்துள்ளன.

நாடு முழுவதும் பரவும் போராட்டம்

கடந்த ஜூன் மாதம் வீசிய வெப்ப அலைகளின் போது, பள்ளிகளில் சரியான வெப்பக் காப்பு (insulation) மற்றும் ஏசி வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பெரும் நெருக்கடிகள் உடல் நலக்குறைபாடுகளை எதிர்கொண்டனர். பல பள்ளிகளில் முறையான அடிப்படை வசதிகள் இல்லை. இந்நிலையில் தான் கல்வித்துறையை முழுமையாக மேம்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி செப்டம்பர் மாதம்மூன்றாம் வாரம் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பாரீஸில் தொடங்கிய போராட்டம் வடக்கு பிரான்ஸின் லீல், போர்டோ, ரென்னெஸ், நாந்தே, லியான், மார்சேய் ஆகியமுக்கிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. சிறுவர்கள் உட்பட சுமார் 600 க்கும் மேற்பட்ட மாணவர்களை மிக மோசமான முறையில் தாக்கி காவலர்கள் கைது செய்துள்ளனர்.பள்ளிகளில் ‘புர்கா’ விற்கு தடை விதிக்க கவனம் செலுத்தும் அரசு, மாணவர்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்று மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இடதுசாரிக் கட்சியான ‘லா பிரான்ஸ்’தலைவர் மெலன்சோன், போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளார். மக்கள் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் அரசுமாணவர்களைக் கொடூரமாக அடக்குவதாகவும், இதில் இனவெறித் தாக்குதல் இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஜனாதிபதி மக்ரோன் தலைமையிலான அரசு நாட்டின் கல்வி, சுகாதாரம் போன்ற மக்களின் உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புக்கான செலவுகளை சுருக்கி விட்டது. மாறாக உக்ரைன் மூலமாக ரஷ்யா மீது நடத்தப்படும் போருக்கு அதிகம் செலவு செய்து வருகின்றது.

போராட்டத்தில் இணையும் அரசு ஊழியர்கள்

அரசின் பட்ஜெட்டில் கல்வி மற்றும் பொதுத்துறைக்கான செலவினங்களில் 54 பில்லியன் யூரோக்களைக் குறைக்கும் திட்டத்திற்கு எதிராக அரசுத்துறை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தான் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். வரும் நாட்களில் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் இணைந்தால் அரசுக்கு நெருக்கடி அதிகமாகும். அந்நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் போராட்டங்கள் அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தி வருகின்றன.

ஆசிரியர்களும் மாணவர்களும் ஒரே விதமான நெருக்கடிகளையே எதிர்கொள்வதால், மாணவர்களின் சங்கமான ‘யூனியன் சிண்டிவேலைநிறுத்தத்துடன் இணைந்து நாடு தழுவிய அளவில் பள்ளிகளை முற்றுக்கையிட அழைப்பு விடுத்துள்ளது. ஊதிய முடக்கம் மற்றும் நிதி ஒதுக்கீட்டுக் குறைப்பு காரணமாக ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும்பிற அரசுத்துறை ஊழியர்களும் மாணவர்களுடன் கைகோர்த்து போராடி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.