ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025
29 Nov 2025, 1:28 pm

பிரான்ஸ் கோல் மழை தென் கொரியாவை 11-1 என்ற கணக்கில் புரட்டியெடுத்தது

21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உல கக்கோப்பை ஹாக்கி தொட ரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வரு கிறது. இந்நிலையில், 2ஆம் நாளான சனி யன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - இங்கி லாந்து (குரூப் இ : மதுரை - ரேஸ் கோர்ஸ்) அணிகள் மோதின. தொ டக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில், நெதர்லாந்து அணி 5-3 என்ற கோல் கணக்கில் கடும் போராட்டத்துடன் இங்கிலாந்து அணி யை வீழ்த்தியது. தொடர்ந்து மதுரை - ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடை பெற்ற 10ஆவது லீக் ஆட்டத்தில் மலேசியா 5-1 என்ற கோல் கணக்கில் (குரூப் இ) ஆஸ்திரியாவை எளிதாக வீழ்த்தியது. சென்னை ராதாகிருஷ்ணன் மைதா னத்தில் நடைபெற்ற 11ஆவது லீக் ஆட் டத்தில் பிரான்ஸ் - தென் கொரியா (குரூப்எப்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே கோல் மழை பொழிந்த பிரான்ஸ் அணி 11-1 என்ற கோல் கணக்கில் தென் கொரி யாவை புரட்டியெடுத்தது. தொடர்ந்து மதுரையில் நடைபெற்ற 12ஆவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி (குரூப் ஏ) 2-1என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது. ஜெர்மனி 7-0 மதுரை - ரேஸ்கோர்ஸ் மைதா னத்தில் நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் 7 முறை சாம்பியனான ஜெர்மனி அணி, பலம் வாய்ந்த கனடா அணியை (குரூப் ஏ) எதிர்கொண்டது. தனது முதல் லீக் ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்பி ரிக்காவை வீழ்த்தியது போல, 2ஆவது லீக் ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் கனடாவை அதிரடியாக வீழ்த்தியது. அதே போல ஆஸ்திரேலியா - வங்கதேசம் அணிகள் மோதிய 14ஆவது லீக் ஆட்டம் சென்னை ராதா கிருஷ்ணன் மைதானத்தில் நடை பெற்றது. இந்த ஆட்டத்தில் 5-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

கண்கவர் வாணவேடிக்கை, மின்விளக்குகளின் வண்ண ஜாலம்

சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற தொடக்க விழாவினை முன்னிட்டு, கண்கவர் வாணவேடிக்கை மற்றும் மின்விளக்குகளின் வண்ண ஜாலத்துடன் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்தியா - சிலி நாடுகளுக்கிடையே நடைபெற்ற போட்டியை தொடங்கி வைத்து, இரு நாட்டு வீரர்களுக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநில ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சர்வண்குமார், மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பி னர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் டத்தோ தயாப் இக்ரம், இந்திய ஹாக்கி சங்கத் தலைவர் திலீப் திர்கி, செயலாளர் போலாநாத் சிங், பொருளாளர் சேகர் ஜெ.மனோகரன், இயக்குநர் (பொது) கமாண்டர் ஆர்.கே.ஸ்ரீவத்சவா, பல்வேறு நாடுகளின் ஹாக்கி சங்க நிர்வாகிகள், ஹாக்கி விளையாட்டு வீரர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.