மாணவர்கள் மீது பிரான்ஸ் காவல்துறை குண்டு வீச்சு சிறுவன் கை துண்டானது
6 Oct 2026, 11:12 pm

மாணவர்கள் மீது பிரான்ஸ் காவல்துறை குண்டு வீச்சு சிறுவன் கை துண்டானது

பாரீஸ்,அக்.6-பிரான்சில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டத்தில் அந்நாட்டு காவல்துறை கையெறி குண்டுகளைவீசியுள்ளது. இதில் ஒரு சிறுவனின் கை தூண்டாகியுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமித்து பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும்;பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை சரி செய்ய வேண்டும்; காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரான்ஸ் முழுவதும் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இப்போராட்டத்தில் ஆசிரியர்களும் இணைந்துள்ளனர்.

செப்டம்பர் 28 முதல், நாடு முழுவதும் 5000 த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் அதிகமானவர்கள் சிறார்கள் ஆவர். வரும்நாட்களில் இப்போராட்டத்தில் மேலும் அதிகமான மாணவர்கள் தொழிலாளர்கள் இணைய உள்ளதாககூறப்படுகின்றது. மாணவர்களின் கல்வி, தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதிகளை வெட்டிவிட்டு உக்ரைன் போருக்கு பணத்தை அள்ளிக்கொட்டும் மக்ரோன் அரசுக்கு மாணவர்களின் போராட்டம் மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதுவன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்நிலையில் திங்கள்கிழமையன்று லென்ஸ் நகரில் நடைப்பெற்ற போராட்டத்தில் மாணவர்களின் மீதுஎறிகுண்டை காவல்துறை வீசியுள்ளது. இந்த குண்டு வெடித்து உள்ளிருந்து நூற்றுக்கணக்கான சிறிய ரப்பர்குண்டுகள் வெளியேறி போராட்டக்காரர்களை கடுமையாக காயப்படுத்தும். இக்குண்டு வெடித்ததில் 15 வயதுசிறுவன் ஒருவரது கை துண்டாகியுள்ளது. இந்த சம்பவம்மாணவர்கள் மத்தியில் கோபத்தை தூண்டியுள்ளது.