வரலாறு காணா வெப்ப அலை பிரான்சில் 1,000 பேர் பலி
30 Jun 2026, 1:07 am

வரலாறு காணா வெப்ப அலை பிரான்சில் 1,000 பேர் பலி

பாரீஸ், ஜூன் 29- ஐரோப்பிய நாடுகளில் வீசி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாகப் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் அதிக உயிரிழப்புகளும் உள்கட்ட மைப்பு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.

வெயிலின் தாக்கம் உச்சமடைந்த கடந்த சில நாட்களில் பிரான்சில் மட்டும், வழக்கமான மரணங்களை விட சுமார் 1,000 கூடுதல் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாடு தெரி வித்துள்ளது. வெயிலின் கொடுமையால் தினசரி மரணங்க ளின் எண்ணிக்கை 1,400 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரி ழந்தவர்களில் 85% பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதிய வர்கள் ஆவர். ஜெர்மனியில் வெப்பநிலை வரலாறு காணாத வகையில் 41.5°C ஆகப் பதிவாகியுள்ளது. இந்த அதீத வெப்பத் தால் அங்குள்ள காடுகளில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள் ளது. குறிப்பாக, இரண்டாம் உலகப்போர் காலத்து வெடிகுண்டு கள் புதைந்துள்ள காட்டுப் பகுதிகளில் தீ பரவியதால், அக்குண்டுகள் திடீரென வெடித்துச் சிதறி வருகின்றன.

ஜெர்மன் தலைநகர் பெர்லினில் வெயிலில் தவித்த மக்களுக்கு உதவ, தண்ணீர் பீரங்கிகளைப்பொது இடங்க ளுக்குக் கொண்டு வந்து, கூடியிருந்த மக்கள் மீது குளிர்ந்த நீரைத் தெளித்து அவர்களைக் குளிர்வித்தனர்.

வெப்பத்தின் காரணமாகப் பல இடங்களில் நெடுஞ்சாலை களின் கான்கிரீட் தளங்கள் வெடித்து பிளந்து விட்டன. தார் உருகி தண்டவாளங்களில் ஒட்டிக்கொண்டதாலும் டிராம் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.