கால்பந்து அரையிறுதிச் சுற்றில் தோல்வி: பிரான்ஸில் வெடித்த கலவரம்
15 Jul 2026, 4:37 pm
<p>உலகக்கோப்பை அரையிறுதியில் பிரான்ஸ் அணி தோல்வி அடைந்ததைத் தொடந்து அந்நாட்டில் கலவரம் வெடித்துள்ளது. </p><p>ஸ்பெயின் – பிரான்ஸ் இடையே நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.</p><p>கடந்த உலகக்கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணி இம்முறை அரையிறுதியில் தோல்வி அடைந்தது. பிரான்ஸ் அணியின் தோல்விக்குப் பிறகு அந்நாட்டின் பல நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது. தோல்வியடைந்த ரசிகர்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாகனங்களைச் சேதப்படுத்தி, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தனர்.</p><p>பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் உள்ளிட்டு பல்வேறு நகரங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். </p>
