விளையாடு
10 Jul 2026, 7:12 pm

விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

மொரோக்கோவை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காலிறுதி ஆட்டங்கள் வெள்ளியன்று (இந்திய நேரப்படி வியாழனன்று நள்ளிரவு) தொடங்கின. இந்நிலையில், வெள்ளியன்று அதி காலை தொடங்கிய முதல் காலிறுதி ஆட்டத்தில் (அமெரிக்கா - பாஸ்டன்) ஐரோப்பா நாடான பிரான்ஸ் - ஆப்பி ரிக்க நாடான மொரோக்கோ அணிகள் மோதின. கடந்த 2022 உலகக்கோப்பை சீசனின் அரையிறுதி ஆட்டத்தில் மொரோக்கோ அணியை வீழ்த்திதான் பிரான்ஸ் இறுதிக்கு (2-0 என்ற கோல் கணக்கில்) முன்னேறியது. இதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் காலி றுதி ஆட்டத்தில் மொரோக்கோ அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சீசனைப் போலவே சூப்பர் பார்மில் களமிறங்கிய பிரான்ஸ் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. பிரான்ஸ் அணியின் கடும் தாக்குதலையும், பல கோல் வாய்ப்பு களையும் மொரோக்கோ கோல் கீப்பர் யாசின் அபாரமாக தடுத்தார். குறிப்பாக ஆட்டத்தின் 28ஆவது பிரான்ஸ் அணி க்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை அந்த அணியின் கேப்டன் மாப்பே வீணடித்தார். அதாவது மாப்பே அடித்த பெனால்டி வாய்ப்பை மொரோக்கோ கோல்கீப்பர் யாசின் மிகச்சிறப்பாகத் தடுத்தார். மறு பக்கம் மொரோக்கோ அணி கோல டிக்க பெரியளவில் முயற்சி எடுக்க வில்லை. இதனால் முதல் பாதி கோலி ன்றி முடிவடைந்தது.

6 நிமிடத்தில் 2 கோல்கள்

இரண்டாம் பாதியிலும் பிரான்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்ந்தது. ஆட்டத்தின் 60ஆவது நிமிடத்தில் மாப்பே பெனால்டி பாக்ஸ் அருகே அதி ரடி கோலடித்தார். இந்தத் தொடரில் மாப்பேவிற்கு 8ஆவது கோலாகும். இதன் மூலம் அதிக கோல் அடித்தவர் களுக்கான ‘கோல்டன் பூட்’ பந்தயத் தில் மெஸ்ஸியுடன் அவர் முதலிட த்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அடுத்த 6 நிமிட இடைவெளியில் பிரான்ஸ் வீரர் டெம்பேலேவும் (66’) பெனால்டி பாக்ஸ் அருகே கோல் விளாசினார். இந்த 2 கோல்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அணி தற்காப்பில் தடுப்பு அரண் அமைத்தது. 80ஆவது நிமிடத்திற்கு மேல் மொரோக்கோ அணி கோலடிக்க கடைசி கட்ட அதிரடியை வெளிப்படுத்தி யும் பலனில்லை. மொரோக்கோவின் கடைசிக் கட்ட தாக்குதலை பிரான்ஸ் கோல் கீப்பர் மைக்னான் அசத்தலாக தடுத்தார். ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. ஜூலை 14 அன்று நள்ளிரவில் நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, ஸ்பெயின் அல்லது பெல்ஜியம் ஆகிய அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறும் அணியை அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் எதிர்கொள்கிறது.

8 கோல்களை தடுத்து மிரட்டல்

காலிறுதியில் மொரோக்கோ அணி தோல்வியை தழுவினாலும் அந்நாட்டு கோல் கீப்பர் யாசின் கால்பந்து உலகில் பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 35 வயதான கோல் கீப்பர் யாசின் பிரான்ஸ் அணியின் அனைத்து தாக்குதல்களையும் தடுத்து, அந்த அணியை கோல் மழையில் நனைய விடாமல் தடுத்தார். இதில் மாப்பேவின் பெனால்டி உட்பட 8 கோல் தடுத்தல் மிக பிரம்மாண்டமானது ஆகும். காலிறுதியில் வெளியேறினாலும் மொரோக்கோ ரசிகர்களுக்கு ஆறுதல் அளித்தது, யாசினின் கோல் கீப்பிங் மட்டுமே.

இங்கிலாந்தை சமாளிக்குமா நார்வே?

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 3ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஐரோப்பா நாடுகளான இங்கிலாந்து - நார்வே அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற உள்ள மியாமி கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி ஞாயிறன்று அதிகாலை 2:30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகளும் லீக், நாக் அவுட் என 3 சுற்றுகளி லும் கடுமையான போராட்டத்துடன் காலிறுதிக்கு முன்னே றியுள்ளன. இதனால் இந்த காலிறுதி ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலிறுதி ஆட்டத்தில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என உறுதியாக கூற முடியாது என்றாலும், முன்னாள் சாம்பியனான இங்கி லாந்து அணி அரையிறுதி முன்னேற கூடுதல் வாய்ப்பு கள் உள்ளன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் அர்ஜெண்டினா அல்லது சுவிட்சர்லாந்து அணியை (ஜூலை 15 - நள்ளிரவு) எதிர்கொள்ளும்.

இங்கிலாந்து - நார்வே

நேரம் : அதிகாலை 2:30 மணி(ஜூலை 12) இடம் : மியாமி, அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

உலகக்கோப்பை வெல்லாவிட்டாலும் “எங்கள் வீடு குட்டி பிரேசிலாக” தான் இருக்கும்

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து 28 கி.மீ., தொலைவில் உள்ள நெடும்பச்சேரிக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 66இன் ஒரு சிறிய பாதை யில் பிரேசில் கொடி அமைப்பில் பச்சை, மஞ்சள் வண்ணத்தில் வீடு ஒன்று உள்ளது. பெரியளவு பங்களா இல்லை. அதிக பரப்பளவு கொண்ட சிறிய குடில் வீடு தான். ஆனாலும் அந்த வீட்டில் நெய்மர் உள்ளிட்ட பிரேசில் வீரர்களின் புகைப்படங்கள் அதிகமாக இருக்கும். அதாவது அந்த வீடு குட்டி பிரேசிலாக இருக்கும். இது உலகக்கோப்பை காலத்தில் மட்டும் செய்யப்படும் தற்காலிக அலங்காரமா? என்று அந்த வீட்டின் சாலு பாலிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பி யதற்கு, “இல்லை, கடந்த 20 ஆண்டுகளாக, 2006ஆம் ஆண்டிலிருந்து இப்படித்தான் இருக்கிறது. நீங்கள் டிசம்பர் மாதத்திலோ அல்லது அடுத்த ஆண்டு இதே நேரத்திலோ வந்தாலும், எங்கள் வீடு இதே பிரேசில் நிறத்தில்தான் இருக்கும். உலகக்கோப்பை வெல்லா விட்டாலும் எங்கள் வீடு குட்டி பிரேசிலாக தான் இருக்கும். உலகக்கோப்பையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவ்வளவு தான்” என பெருமிதமாக கூறினார்.

சைபாரி இல்லாததே மொரோக்கோவிற்கு பின்னடைவு

மொரோக்கோ அணியின் நட்சத்திர வீரர் இஸ்மாயில் சைபாரி நடப்பு சீசன் உலகக்கோப்பையில் 3 கோல்களை அடித்து இருந்தார். மொரோக்கோ காலிறுதிக்கு முன்னேறியது கூட சைபாரியின் கோல்களால் தான். ஆனால் எதிர்பாராவிதமாக காலிறுதியில் காயம் காரணமாக சைபாரி களமிறங்கவில்லை. இதுதான் அந்த அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. சைபாரி இல்லாமல் மொரோக்கோ முன்களத்தில் கடும் சோர்வுடன் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மாப்பேவுக்கு காயம் : பிரான்ஸுக்கு அதிர்ச்சி

ஆட்டத்தின் 77ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் கேப்டன் மாப்பேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக மைதானத்தை விட்டு அவர் வெளியேறினார். இது பிரான்ஸ் ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அவரது காயம் பெரிய அளவில் தீவிரமானது இல்லை என்றும், அரையிறுதிப் போட்டியில் அவர் விளையாடுவார் என அணி நிர்வாகம் தரப்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.