இந்திய ராணுவத்தில் சேர்ந்த நான்காம் தலைமுறை பெண்
8 Mar 2026, 3:42 pm
<p><strong>இந்திய ராணுவத்தில் சேர்ந்த நான்காம் தலைமுறை பெண் </strong></p>
<p>அதிகாரி சென்னை, மார்ச் 8- சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாடமியிலிருந்து இந்திய ராணுவத்தில் நான்காம் தலைமுறை பெண் அதிகாரி பணியில் இணைந்தார். லெப்டினன்ட் பிரஞ்சல் நங்கரே, மார்ச் 7, அன்று சென்னை, அதிகாரிகள் பயிற்சி அகாடமியில் (ஓடிஏ) இந்திய ராணுவ படைக்கலப் பிரிவில் சேர்ந்தார். இதன்மூலம் அவர் ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்காவது தலை முறை அதிகாரியானார். லெப்டினன்ட் பிரஞ்சல் தனது குடும்பத்தில் பாதுகாப்பு படைகளில் பணியாற்றும் 15வது உறுப்பினராகவும், இரா ணுவத்தில் சேரும் 13வது நபராகவும், தமது குடும்பத்தின் முதல் பெண் அதிகாரியாகவும், திகழ்கிறார். லெப்டினன்ட் பிரஞ்சல், இந்திய இராணுவத்தின் தெற்கு ஆணையகத்தில் பணிபுரியும் மேஜர் ஜெனரல் பராக் நங்க ரேவின் மகள் ஆவார். அவர் இராணுவத்தின் நெறிமுறை கள், ஒழுக்கம் மற்றும் மதிப்புகளால் ஆழமாக ஈர்க்கப் பட்டு வளர்ந்தார். சிறுவயதிலிருந்தே தைரியம், தியாகம் மற்றும் சேவை பற்றிய வரலாறுகளை கேட்டு பார்த்து வளர்ந்த அவருக்கு ராணுவ சீருடை அணியும் எண்ணம் உருவானது. ஊடகத் துறையில் முதலில் கால்பதித்த போதிலும், லெப்டினன்ட் பிரஞ்சல் தனது இளம்பருவ கனவாகிய ராணுவ சேவையை தற்போது நனவாக்கியுள்ளார்.</p>
