4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பு நிறுத்தம்</strong></p><p>சென்னை, ஏப். 8 - ஒருங்கிணைந்த 4 ஆண்டு பி.எஸ்சி., பி.எட்., மற்றும் பி.ஏ.பி.எட்., படிப்புகள் 2026-27 கல்வியாண்டு முதல் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.</p><p>தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் கடந்த 2025 செப்.12 அன்று வெளியிட்ட பொது அறிவிப்பு மற்றும் 2025 ஜூன் 3 நாளிட்ட அரசு இதழ் அறிவிப்பின் படி இந்த படிப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை இனி அனுமதிக்கப்படாது என்று கூறியிருக்கும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், விதிகளை மீறி மாணவர் சேர்க்கை மேற்கொள்ளக் கூடாது என்றும் எவ்விதத்திலும் தங்கள் பொறுப்பிற்கு முடியும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.</p>
