அவிநாசியில் அடிக்கல் நாட்டு விழா: ஆ.ராசா எம்பி., பங்கேற்பு
13 Feb 2026, 5:58 pm
<p><strong>அவிநாசியில் அடிக்கல் நாட்டு விழா: ஆ.ராசா எம்பி., பங்கேற்பு</strong></p>
<p>அவிநாசி, பிப்.13- அவிநாசியில் ரூ.12.64 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா வியாழக் கிழமை அடிக்கல் நாட்டினார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி மற்றும் திருமுருகன் பூண்டி நகராட்சி பகுதிகளில் ரூ.12.64 கோடி மதிப்பிலான பல் வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று திட் டங்களைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, சட்ட மன்றத் தேர்தல் பொறுப்பாளர் கோகுல் கிருபா சங்கர், நகர் மன்றத் தலைவர்கள் தனலட்சுமி பொன்னுச்சாமி, குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
<p> </p>
