பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா
2 Feb 2026, 3:32 pm
<p><strong>பனைபொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா</strong></p>
<p>இராமநாதபுரம், பிப்.2- இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், நரிப்பை யூரில் திங்களன்று கதர் வாரியத் துறையின் மூலம் பனை பொருள் வர்த்தக மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் மற்றும் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை செயற்பதிவாளர் வா.சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். கதர் வாரியத் துறையின் மூலம் ரூ.163 லட்சம் மதிப்பீட்டில் பனை பொருள் வர்த்தக மைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. முன்னதாக வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காந்தியின் உருவப்படத் திற்கு மரியாதை செலுத்தியதுடன், புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். இதில் கதர் துறை துணை இயக்குநர் பாரதி, உதவி இயக்குநர்கள் டீ.எபநேசர், முத்துக்குமார், தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் லிட் செயல் ஆட்சியர் க.செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
