நாகப்பட்டினம், கீழ்வேளூர் தொகுதியில் பாலங்கள் அடிக்கல் நாட்டுவிழா
16 Feb 2026, 2:37 pm
<p><strong>நாகப்பட்டினம், கீழ்வேளூர் தொகுதியில் பாலங்கள் அடிக்கல் நாட்டுவிழா</strong></p>
<p>நாகப்பட்டினம், பிப்.16- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதிக்குட்பட்ட நீலப்பாடி, ராயத்த மங்களம் கிராமத்தில் காருகுடி மற்றும் கீழ்வேளூர் வடிகால் வாய்க்காலில் ரூ.215.25 லட்சம் மதிப்பிலும், நீலப்பாடி மற்றும் ராயத்தமங்களம் இணைப்பு சாலையில் ரூ.248.60 லட்சம் மதிப்பிலும், நபார்டு நிதியில் இரண்டு பாலங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு திங்கட்கிழமை நடைபெற்றது. கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் வி.பி.நாகைமாலி அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் கீழ்வேளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேவதி, உதவிப் பொறியாளர் செந்தில்குமார், கிராம முக்கியஸ்தர்கள் சரத்பாபு, இ.சி.ஆர். பாரதிமோகன் மற்றும் பொதுமக்கள்பங்கேற்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை ஏழு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இவை இரண்டையும் சேர்த்தால் ஒன்பது பாலங்களாகும். </p>
