குடிநீர் வழங்குதல் தொடர்பான புதிய பணிக்கு அடிக்கல்
6 Mar 2026, 3:17 pm
<p><strong>குடிநீர் வழங்குதல் தொடர்பான புதிய பணிக்கு அடிக்கல்</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 6- அரூர் நகராட்சியில் குடிநீர் வழங்குதல் தொடர் பான புதிய திட்டப்பணிக்கு வெள்ளியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூர் நகராட்சிக்குட்பட்ட திரு.வி.க நகரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் 2025-2026 ஆம் ஆண்டு நிதியின் கீழ், ரூ.20 கோடி மதிப்பீட்டில் வள்ளிமதுரை வரட்டாறு நீர்த் தேக்கத்திலிருந்து அரூர் நகராட்சிக்கு குடிநீர் வழங்கு தல் தொடர்பான புதிய திட்டப்பணிக்கு வெள்ளியன்று அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஸ், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகி யோர் பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் வே.சம்பத்குமார், நகராட்சி நிர் வாக மண்டல இயக்குநர் ப.அசோக்குமார், நகராட்சி ஆணையர் பூ.சொ.ஹேமலதா, நகர்மன்றத் தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் து.தனபால், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் வேடம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
