முந்தய பக்கம்

விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல்

16 Feb 2026, 2:37 pm
விளையாட்டு மைதானம் அமைக்க அடிக்கல்
<p><strong>திருப்பத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பன்நோக்கு அரங்குகள் கட்ட அடிக்கல்</strong></p> <p>திருப்பத்தூர், பிப்.16- &nbsp;திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய பன்நோக்கு அரங்குகள் கட்டப்பட உள்ளன. செவ்வாயன்று (பிப். 17) &nbsp;நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் &nbsp;காணொலி காட்சி வாயிலாக இந்தக் கட்டிடப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் &nbsp;நேரில் சென்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணி களை முறைப்படி துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் திருப்பத்தூர் மாவட்ட சேர்மன் சூரியகுமார், ஜோலார்பேட்டை ஒன்றிய சேர்மன் &nbsp;சத்யா, செயலாளர் சதீஷ்குமார், பேரூ ராட்சி செயலாளர் &nbsp;உமா சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram