முந்தய பக்கம்

ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டல்

17 Feb 2026, 3:36 pm
ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில்  புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டல்
<p><strong>ஞானாம்பிகை மகளிர் கல்லூரியில் &nbsp;புதிய வகுப்பறைகள் கட்ட அடிக்கல் நாட்டல்</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.17- &nbsp;மயிலாடுதுறையில் தருமபுரம் &nbsp;ஞானாம்பிகை மகளிர் கலைக்கல்லூரி யில் &nbsp;ரூ.5 கோடியே 98 லட்சத்து 50 &nbsp;ஆயிரம் மதிப்பீட்டில் 17 வகுப்பறைகள் &nbsp;கட்டுவதற்கு, தமிழக முதல்வர் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கல்லூரியில் மொத்தம் &nbsp;1,876 &nbsp;சதுர மீட்டர் அளவில் 15 வகுப்பறைகளு டன் கூடிய கூடுதல் கட்டடம் அமைய உள்ளது. மேலும், ஏற்கனவே உள்ள 13 &nbsp;வகுப்பறைகளுடன் கட்டடத்தில் கூடுத லாக 190 சதுர மீட்டர் அளவில் 2 புதிய &nbsp;வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. &nbsp; இன்றைய தினம், கூடுதல் வகுப் பறை கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மயிலாடு துறை சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டனர். &nbsp;மயிலாடுதுறை நகர்மன்ற தலைவர் &nbsp;செல்வராஜ், தருமபுரம் ஞானாம்பிகை மகளிர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் ரேவதி, மயிலாடுதுறை நகர் மன்றக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram