தியாகராஜ சுவாமி கோவிலில் ரூ.4.13 கோடியில் அடிக்கல் நாட்டல்
3 Jan 2026, 4:57 pm
<p><strong>தியாகராஜ சுவாமி கோவிலில் ரூ.4.13 கோடியில் அடிக்கல் நாட்டல்</strong></p>
<p>திருவாரூர், ஜன.3- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலில் ரூ.4.13 கோடி மதிப்பீட்டில் கமலாலய திருக்குளத்தின் தெற்குகரை சுற்றுச்சுவர் பழுது பார்த்து புதுப்பித்தல் மற்றும் ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருக்கோவிலின் தேவாசிரிய மண்டபம் பழுது பார்த்து புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனையொட்டி, கோவில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் மற்றும் துணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) ராணி, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில், மண்டல செயற்பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
