முந்தய பக்கம்

முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

yesterday
முன்னாள் ஒன்றிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!
<p>காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய இணையமைச்சருமான சுதர்சன நாச்சியப்பன் (78) உடல்நலக்குறைவால் இன்று சிவகங்கையில் காலமானார்.</p><p>காங்கிரஸ் மூத்த தலைவர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன், கடந்த 1999 - 2004 காலக்கட்டத்தில் சிவகங்கை தொகுதியின் மக்களவை உறுப்பினராகவும், 2004 - 2016 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். இதை தொடர்ந்து, 2013 ஜூன் 17 முதல் 2014 மே 26 வரை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.</p><p>இந்நிலையில் சிவகங்கையில் உள்ள தனது இல்லத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். </p>
Share
FacebookXWhatsAppTelegram