முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் சந்திப்பு
22 May 2026, 9:56 pm
<p><strong>முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவிகள் சந்திப்பு</strong></p><p>மயிலாடுதுறை, மே 22- மயிலாடுதுறை மாவட்டம் பொறை யாரில் அமைந்துள்ள தவசுமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில் 1988–1990 ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சி பெற்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி, காரைக்காலில் உள்ள தனியார் மண்டபத்தில் வியாழனன்று நடைபெற்றது. சுமார் 22 முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவிகள், 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒன்று கூடி, தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த இனிய சந்திப்பு, பழைய நட்புகளையும் மாணவர் கால நினைவுகளையும் மீண்டும் உயிர்ப்பித்த நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது என்றனர். தொடர்ந்து, முன்னாள் மாணவிகள் தலைமை ஆசிரியர் கே. சிவக்குமாரை சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி, அவரின் வாழ்த்துகளை பெற்றனர்.</p>
