ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!
9 Apr 2026, 5:30 am

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

சென்னை, ஏப். 8 - தமிழகச் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது, அண்மையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மாற்றியது. இதுதொடர்பான விவாதங்கள் அடங்குவதற்கு உள்ளாகவே தமிழக தலைமைச் செயலாளர் முருகானந்தத்தையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

மேலும், புதிய தலைமைச் செயலாளராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த சாய்குமார் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து வந்த செய்திகளுக்கிடையே பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம் காவல்துறை ஆணையர்கள், மண்டல ஐஜிகள் என தொடர்ச்சியாக பல முக்கிய அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மாற்றப்பட்டது, அவருக்குப் பதில், பல்வேறு முறைகேடுகள், குற்றச்சாட்டுகளில் சிக்கி, நடவடிக்கைக்கு உள்ளான அபிஷேக் தீட்சித்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. தமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபி வெங்கடராமனும் மாற்றப்பட்டார். தற்போது தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமும் மாற்றப்பட்டுள்ளார்.

மறைமுக காய் நகர்த்தல் தமிழகத்தில் மீண்டும் திமுக கூட்டணி தான் வெற்றி பெறும்; அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வி அடையும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தேர்தல் களமும் அதையே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. இதனால், ஆந்திர மலைந்துள்ள பாஜக, ஆளும் திமுக தலைமை மற்றும் அமைச்சர்களின் தேர்தல் பணிகளை முடக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாகவும், இதற்கு சாதகமான அதிகாரிகளை உரிய இடங்களில் அமர்த்துவதற்காகவே, தேர்தல் ஆணையம் மூலம் காய்களை நகர்த்தி வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படாமல், ஒன்றிய பாஜக அரசின் அறிவிக்கப்படாத துணை அமைப்பாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது. தமிழகத்தில் எந்தவித பெரிய சட்டம் - ஒழுங்கு பிரச்சனையும் இல்லாத நிலையில், தேர்தல் நெருங்கும் நேரத்தில் இவ்வளவு விரைவாகவும் பரவலாகவும் அதிகாரி மாற்றங்களை தேர்தல் ஆணையம் மூலமாக செய்வது ஏன்? எனவும் கேள்விகள் எழுந்துள்ளன.

‘என்.டி.ஏ.’ கூட்டணிக்காக நடக்கும் அதிகார அத்துமீறல்: உச்சகட்ட ஆணவம்! முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம். தமிழக தலைமைச் செயலாளரை மாற்றியதற்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: பாஜக ஆளும் அரசும் மாநிலத்தில் தேர்தல் நடக்கிறது. அங்கு டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை.

பாஜக ‘பி-டீம்’ (ஏடிஎம் கே) ஆட்சி நடத்திய போது மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. அப்போது டிஜிபி, தலைமைச் செயலாளரை மாற்றவில்லை. தமிழ் நாட்டில் மட்டும் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் தேர்தல் ஆணையத்தின் கண்ணை உறுத்துகிறார்கள். அவர்களை பாதுகாப்பின் தூண்டுதலில் மாற்றியிருக்கிறது.

தமிழ்நாட்டில் பாஜகவுடன் அதிமுக கைகோர்த்து நடத்த இருக்கும் தேர்தல் முறைகேடுகளுக்கு துணை போகத் துடியாய்த் துடிப்பது தேர்தல் ஆணையத்திற்கு அழகு அல்ல. ஆணையத்தின் அலுவலர்கள் இன்று இருக்கலாம்; நாளை பதவியிலிருந்து போய் விடலாம். ஆனால் நாட்டு மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நம் அரசியல் சட்ட முன்னோடிகளால் உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்தப்படுவது நம் நாட்டிற்கும் - சுதந்திரமான நியாயமான தேர்தலுக்கும் பேராபத்து. ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையாக இருக்கும் தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது என்பதையே இந்த நடவடிக்கைகள் எல்லாம் காட்டுகின்றன.