ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!
9 Apr 2026, 5:30 am

ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்தவர் புதிய தலைமைச் செயலாளராக நியமனம்!

சென்னை, ஏப். 8 - தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடை பெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையமானது, அண்மையில் தமிழ்நாடு காவல்துறை தலைவர் மாற்றியது. இதுதொடர்பான விவாதங்கள் அடங்குவதற்கு உள்ளாகவே தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகத்தையும் தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது.

மேலும், புதிய தலைமைச் செயலாளராக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனிச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் நியமித்து உத்தரவிட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், அந்தப் பதவியிலிருந்து மாற்றப்பட்டு, அவரது இடத்திற்கு சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார்.

சட்டம் - ஒழுங்கு டிஜிபி மாற்றம்