முந்தய பக்கம்

ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு

19 Jul 2026, 10:26 pm
ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு  முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு
<p><strong>ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருக்கு முனைவர் பட்டம் வழங்கி கௌரவிப்பு</strong></p><p>பாபநாசம், ஜூலை 19- தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெய்சங்கர். இவர், கடந்த 18 ஆண்டுகளாக வல்லம் அருண் கல்வியியல் கல்லூரியில் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் சிறந்த முறையில் பணியாற்றியமைக்காக, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் சிறந்த பேராசிரியர் விருது பெற்றார். கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவராக அவர் இருந்த 5 ஆண்டுகளில், ஊராட்சியில் பள்ளிக்கூட கட்டமைப்பினை உருவாக்கியது, கல்வி மற்றும் மாணவர் மேம்பாடு சார்ந்த நடவடிக்கைகள், தொடர்ந்த சமூக சேவை நடவடிக்கைகள் ஆகியவைக்காக, பாண்டிச்சேரி கம்பன் கழகத்தில் நடந்த விழாவில் அமெரிக்கன் யுனைடெட் யுனிவர்சிட்டி சார்பில் முனைவர் பட்டம் வழங்கி கௌரவித்தது. முனைவர் பட்டம் பெற்ற ஜெய்சங்கர் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹானை, கபிஸ்தலம் சுதாகர் மூப்பனாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதில் வல்லம் அருண் கல்வியியல் கல்லூரி முதல்வர் மணிமுருகன் உட்பட பலர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram