முன்னாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாதவர் கே. பாலகிருஷ்ணன் புகழாரம்
15 Feb 2026, 3:03 pm
<p><strong>முன்னாள் அமைச்சர் வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாதவர் கே. பாலகிருஷ்ணன் புகழாரம்</strong></p>
<p>சிதம்பரம், பிப். 15- முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாமல் நேர்மையுடன் வாழ்பவர் என அவரது நூற்றாண்டு விழாவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் 13 துறைகளுக்கு அமைச்சராகவும், நாடாளு மன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய வி.வே.சுவாமிநாதனின் 100-வது வயதை முன்னிட்டு சிதம்பரத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விஐடி கல்விக் குழுமங்களின் வேந்தர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். நூற்றாண்டு விழாக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஜி.எம். ஸ்ரீதர் வாண்டையார் முன்னிலை வகித்த னர். விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேசிய தாவது: “வி.வே.சுவாமிநாதன் யாருக்கும் அடிபணியாதவர். அரசியலிலும் ஆட்சியி லும் இருந்தபோது பல்வேறு நெருக்கடி களைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றி கண்டவர். சிதம்பரத்திற்கு அரசு கலைக் கல்லூரி மற்றும் பாதாளச் சாக்கடைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங் களைக் கொண்டு வந்தவர். ஆட்சியில் இருந்தபோது குடும்ப நலனுக்காகச் சொத்துகளைச் சேர்க்காமல், நேர்மையுடன் செயல்பட்டவர். அதனால்தான் அவரை அனைவரும் மதிக்கின்றனர் என்றார். வள்ளலார் கூறியது போல், அவர் மரண மில்லா வாழ்க்கையை வாழ்வார் என்ற நம்பிக்கை உள்ளது, என வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக செய்தி தொடர்பாளர், டி.கே.எஸ். இளங்கோவன், காங் முன்னாள் மாநிலத்தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னாள் அமைச்சர்கள் நல்லுசாமி, அரு ணாச்சலம், திமுக முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், முன்னாள் நகர்மன்ற தலைவர் சந்திரபாண்டியன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பி னர் மணிவாசகம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, திமுகதிராவிடர் கழகம் துணைத் தலைவர் சித்தார்த்தன், சிதம்பரம் திமுக நகர்மன்ற உறுப்பினர்கள், ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் ராமநாதன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்ட னர். விழாவில் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியை திராவிடர் கழக மாவட்டத் தலைவர் பூ.சி இளங் கோவன் தொகுத்து வழங்கினார். வழக்கறி ஞர் பார்த்திபன் நன்றி கூறினார்.</p>
