முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவிலிருந்து விலகினார்! எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்
18 May 2026, 10:37 pm

முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவிலிருந்து விலகினார்!

எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம்

சென்னை, மே 18 - அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக பொதுச்செய லாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தனது விலகல் கடிதத்தை அனுப்பியுள்ள எஸ். செம்மலை, 2009 முதல் 2014 வரை கல்வி மற்றும் சுகாதாரத்துறை அமைச்ச ராகவும், சட்டமன்றத் துணை சபாநாய கராகவும், அதிமுக அமைப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர். அண்மையில் நடந்த தேர்தலுக்குப் பிறகு கட்சியில் நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துவதாகவும், தற்போது நடக்கும் சம்பவங்கள் எதுவும் திருப்தியளிக்கவி ல்லை, மாறாக கவலையளிக்கின்றன என்றும் தனது விலகல் கடிதத்தில் செம்மலை குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். உருவாக்கி, அம்மா காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்த நிலையா என்ற கேள்வியை எழுப்பி யிருக்கும் அவர், உட்கட்சி சண்டை யால் அதிமுக பரிகாசத்திற்கு ஆளா கிறது என்றும் வருந்தியிருக்கும் அவர், கனத்த இதயத்துடன் கட்சி யிலிருந்தும், தான் வகித்த பொறுப்பி லிருந்தும் விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.