தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் விவகாரம் ஐ.நா., விசாரணை குழுத் தலைவராக இந்திய முன்னாள் நீதிபதி எஸ்.முரளிதர் நியமனம்

28 Nov 2025, 2:28 pm
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் விவகாரம் ஐ.நா., விசாரணை குழுத் தலைவராக இந்திய முன்னாள் நீதிபதி எஸ்.முரளிதர் நியமனம்
<p><strong>இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் விவகாரம் ஐ.நா., விசாரணை குழுத் தலைவராக இந்திய முன்னாள் நீதிபதி எஸ்.முரளிதர் நியமனம்</strong></p> <p>புதுதில்லி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் ஐக்கிய நாடுகள் சபை குழுவின் தலைவராக இந்திய முன்னாள் நீதிபதி எஸ். முரளிதர் நியமிக்கப் பட்டுள்ளார். &nbsp;இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் சர்வதேச மனிதாபி மானச் சட்டங்கள் மீறப்படுவது குறித்தும், அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரிப்பதற்காக ஐக்கிய நாடு கள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் ஒரு சுதந்திரமான சர்வதேச விசாரணைக் குழு வை அமைத்தது. இந்தக் குழுவானது 2021 &nbsp;ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அங்கு நடை பெறும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் விதிமீறல்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. இதுவரை இந்த முக்கியத்துவம் வாய்ந்த குழுவின் தலைவராகத் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நிபுணரான நவி &nbsp;பிள்ளை செயல்பட்டு வந்தார். அவர் தனது பணிக்காலம் முடிந்து சமீபத்தில் ஐ.நா., &nbsp;பொதுச் சபையில் தனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்து விடைபெற்றார். இந்நிலையில், காலியாக இருந்த அந்தப் பதவிக்கு ஒடிசா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியும், மூத்த வழக்கறிஞருமான டாக்டர் எஸ்.முரளிதர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருடன் ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த &nbsp;பிளாரன்ஸ் மும்பா, ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த கிறிஸ் சிடோட்டி ஆகியோரும் இக்குழுவின் உறுப்பினர்களாகச் செயல்படு வார்கள் என்று ஐ.நா., சபை அதிகாரப்பூர்வ மாக அறிவித்துள்ளது. சர்வதேச முக்கியத்து வம் வாய்ந்த இந்தப் பொறுப்பில் இந்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது, சர்வதேச சட்ட அரங்கில் இந்தியாவிற்குக் கிடைத்த பெரிய அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.