தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி திருக்கோவிலூர் ஆர். தியாகராசன் காலமானார்

21 Dec 2025, 3:21 pm
அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி  திருக்கோவிலூர் ஆர். தியாகராசன் காலமானார்
<p><strong>அரசு ஊழியர் சங்க முன்னாள் நிர்வாகி &nbsp;திருக்கோவிலூர் ஆர். தியாகராசன் காலமானார்</strong></p> <p>திருக்கோவிலூர்,டிச.21- &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட அமைப்பாளரும் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் ஒன்றுபட்ட விழுப்பு ரம் மாவட்ட முன்னாள் செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினருமான திருக்கோவிலூர் தோழர் ஆர்.தியாகராசன் (85) ஞாயிறன்று காலை உடல் நலக்குறைவால் காலமானார். &nbsp;ஆர்.டி என்று அனைத்து தோழர்களும் அன்புடன் அழைக்கப்படும் அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் மறைந்த டி.லட்சுமணன் மற்றும் எம்.ஆர்.அப்பன் ஆகியோரால் இயக்கத் திற்கு அழைத்துவரப்பட்டவர். &nbsp;தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 1983 ஆம் ஆண்டு &nbsp;மதுரையில் துவங்கப்பட்ட போது ஒன்று பட்ட தென்னாற்காடு மாவட்ட அமைப்பாள ராக ஆர்.டி தேர்வு செய்யப்பட்டார்.1983 ஆம் ஆண்டு நடைபெற்ற 33 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திலும் பங்கேற்ற வர். சங்க இயக்கங்களில் பங்கேற்றதன் காரணமாக ஏழு முறை சிறு சிறைவாசம் அனுபவித்தவர். &nbsp;கட்சியின் தலைவர்கள் ஏ.நல்லசிவன், ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், என்.குணசேகரன் போன்றவர்களுடன் நன்கு அறிமுகமானவர் ஆர்.டி. மேலும் தற்போது திருக்கோவிலூரின் அடையாளமாக திகழும் &nbsp;சங்க பெயரில் அமைந்துள்ள என்.ஜி.ஜி.ஓ நகரை உருவாக்கியவர்களில் ஒருவர் ஆர்.டி. 1960 ஆகஸ்ட் 14 இல் துவங்கிய அவருடைய அரசுப்பணி 1998 &nbsp;ஜூன் 30 அன்று 58 ஆவது வயதில் நிறைவடைந்தது. 14.06.1941 துவங்கிய அவருடைய பூவுலக வாழ்க்கை பொது சேவைகளோடு 21.12.2025 அன்றோடு நிறைவடைந்துள்ளது. தலைவர்கள் இரங்கல் ஆர்.டி அவர்களின் மறைவிற்கு தோழர் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பால கிருஷ்ணன், கட்டுப்பாட்டுக் குழு தலைவர் &nbsp; ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசி மூல மாக தொடர்பு கொண்டு இரங்கலை தெரி வித்தனர். கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, செயற் குழு உறுப்பினர்கள் ஜி.ஆனந்தன், டி. ஏழுமலை, பி.சுப்பிரமணி , எம்.கே.பூவரா கன், மா. செந்தில் மற்றும் தோழர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.