சிபிஎம் முன்னாள் கிளைச் செயலாளர் வி.எத்திராஜன் காலமானார்
15 Feb 2026, 3:03 pm
<p><strong>சிபிஎம் முன்னாள் கிளைச் செயலாளர் வி.எத்திராஜன் காலமானார்</strong></p>
<p>கடலூர், பிப். 15- கடலூர் ஒன்றியம் தூக்கணாம் பாக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கிளைச் செயலாளர் வி.எத்தி ராஜன் (78), உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை ( பிப்.15) மாலை காலமானார். அவரது உடல் தூக்கணாம் பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. எத்திராஜன் கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றியக் குழு உறுப்பின ராகவும், தூக்கணாம்பாக்கம் கிளைச் செயலாளராகவும் பணி யாற்றியுள்ளார். தோழரின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். அவரது உடல் நாளை (திங்கட்கிழமை, பிப். 16) மாலை நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p> </p>
