தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கடன் வாங்கித்தருவதாகக்கூறி பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரர் கைது

5 Jun 2026, 10:28 pm
கடன் வாங்கித்தருவதாகக்கூறி பாலியல் தொல்லை: முன்னாள் ராணுவ வீரர் கைது
<p>உதகை, ஜூன் 5- </p><p>கடன் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைக்கூறி, பாலி யல் தொல்லை அளித்த முன்னாள் ராணுவ வீரரை காவல் துறையினர் கைது செய்தனர். </p><p>நீலகிரி மாவட்டம், குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த பெண்கள், கடந்த 4 ஆண்டுகளாக ஊட்டச்சத்து உணவுகளை விற்பனை செய்யும் சுயத்தொழில் செய்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களது குழுவிற்கு கோத்தகிரி பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஸ்ரீராம் (48) என்பவர் அறிமுகமாகியுள்ளார். இவ ருக்கு திருமணமாகி இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட் டார். இந்நிலையில், வங்கிகள் மற்றும் சிறு தனியார் நிதி நிறு வனங்கள் மூலம் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, கடன் வாங்குவதற்கு தேவையான முன்கட்டண தொகை யாக பலரிடமும் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்துள்ளார். ஆனால், பெண்களுக்கு கடன் வாங்கி தரவில்லை. கட்டணத் தொகையையும் திருப்பிக் கொடுக்கவில்லை. அதிர்ச்சிய டைத்த பெண்கள் அவரிடம் கட்டணத் தொகையை திருப்பி கேட்டபோது, அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த னர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் பர்வீன் பானு, உதவி ஆய்வாளர் வசந்தகுமாரி தலைமையிலான போலீசார், விசா ரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர். இதன் பின்னர் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார ளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.