அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 18 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு
2 Nov 2026, 12:31 am

அதிமுக முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட 18 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு

தருமபுரி, நவ.1-தருமபுரியில் பெட்ரோல் பங்க் ஊழியரை சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி உட்பட 18 பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி வட்டம் வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார் இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். தருமபுரி அருகே ராஜாபேட்டையில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பஙகில் கடந்த 6 மாத காலமாக வேலை செய்து வருகிறார். கடந்த அக் -26. தேதி அன்று காலை பெட்ரோல் பங்கில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிகொண்டிருந்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி மற்றும் அவரது உதவியாளர் லோகேஷ் ஆகிய இருவரும் பங்கிற்க்கு வந்துள்ளனர். அவர் காரில் இருந்து இறங்கியவுடன் பெட்ரோல் நிரப்புவதற்கு வரும் வாகனங்களை உள்ளே வரவிடாமல் தடுத்து நிறுத்தினர். பிறகு அருண்குமாரை பார்த்து மிரட்டிவிட்டு, சாதியின் பெயரை குறிப்பிட்டு இழிவாக சொல்லி திட்டியுள்ளார்.

மேலும், அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த சக ஊழியரான நந்தகுமார் என்பவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவருடன் வந்த அன்பு ஏஜன்ஸின் உரிமையாளர் அன்பு அவர்களும் சக ஊழியர்களை பார்த்து அவரும் சாதியை குறிப்பிட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதுகுறித்து அருண்குமார் அளித்த புகாரில், முன்னால் எம்.எல்.ஏ கோவிந்தசாமி அவர்களுடன் வந்த 15-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கில் நுழைந்து கலவரம் செய்ய முற்பட்டனர். மேலும், நான் பணிபுரியும் சி.கே.எம் பெட்ரோல் பங்கில் நுழைந்து சாதி;ப பெயரை சொல்லி திட்டியும் கொலை மிரட்டல் விடுத்த மேற்கண்ட நபர்கள் மீதும் அவர்கள் உடன் வந்த நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கோவிந்தசாமி அவரது உதவியாளர் லோகேஷ் உள்ளிட்ட 18 பேர் மீது பிரிவுகள், 329(3),191(2),296(பி),115(2),3(1(ஆர்),3(1)(எஸ்) எஸ்பி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தருமபுரி நகர காவல்நிலையத்தில் வழக்குபதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.