மனைவியை ஓட்டுநர் மூலம் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது
15 Nov 2025, 4:09 pm
<p><strong>மனைவியை ஓட்டுநர் மூலம் கொலை செய்துவிட்டு நாடகமாடிய அதிமுக முன்னாள் கவுன்சிலர் கைது</strong></p>
<p>கோவை, நவ.15- மனைவியை ஓட்டுநர் மூலம் கொலை செய்துவிட்டு, நாடக மாடிய கோவை அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம், பன்னி மடை பகுதியைச் சேர்ந்தவர் கவி சரவணன் (51). அதிமுக வடக்கு மாவட்ட அம்மா பேரவை நிர்வாகி யான, இவர் மாவட்ட கவுன்சில ராகவும், பன்னிமடை ஊராட்சி தலைவராகவும் இருந்தார். இவரது மனைவி மகேஸ்வரி (46). கவி சரவணனுக்கு வேறொரு பெண்ணு டன் திருமணத்தை மீறிய உறவு இருந்ததால், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற் பட்டு, இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனர். கடந்த அக்.28 ஆம் தேதியன்று மகேஸ்வரியை, கவி சரவணனின் கார் ஓட்டுநர் சுரேஷ் (49) என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்ட தாகக்கூறி, வடவள்ளி காவல் நிலை யத்தில் சரணடைந்தார். இதைய டுத்து வடவள்ளி போலீசார் தடாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் தடாகம் போலீ சார் மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள் ளார். இதையடுத்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரி சோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத் தனர். இதுதொடர்பாக சுரேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தான் கடந்த 15 ஆண்டுகளாக கவி சரவணனுக்கு ஓட்டுநராக பணியாற்றி வருவதாக வும், கவி சரவணன் மற்றும் மகேஸ் வரி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், கவி சரவணன் கூறியதால் மகேஸ்வ ரிக்கு வீட்டு மளிகை சாமான்களை அவ்வப்போது வாங்கி கொடுத்து வந்தேன். வழக்கம் போல் மளிகை சாமான்களை கொடுக்கச் சென்ற போது, கவி சரவணனுக்கு போனில் அழைத்து பேசுமாறு சுரேஷ் கூறிய போது, மகேஸ்வரி அவரை தகாத வார்த்தைகளால் பேசி திட்டியதாக வும், இதனால் ஆத்திரமடைந்த அவரை கொலை செய்து விட் டேன் என தெரிவித்துள்ளார். இதை யடுத்து நடந்ததை கவி சரவணனி டம் கூறியதாகவும், அவரது அறிவு றுத்தலின் படி வடவள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறையில் அடைத் தனர். இருப்பினும் கவி சரவணன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்ட தால், அவரையும் அழைத்து விசா ரித்துள்ளனர். ஆனால் தனக்கும் இந்த கொலைக்கும் எந்த தொடர் பும் இல்லை என தொடர்ந்து மறுத்து வந்தார். இந்நிலையில், சுரேஷை போலீசார் காவலில் எடுத்து தனி இடத்தில் வைத்து தொடர்ந்து விசா ரணை நடத்தினர். அதில், கவி சர வணன் மற்றும் மகேஸ்வரிக்கு கருத்து வேறுபாடு இருந்த நிலை யில், மகேஸ்வரி தொடர்ந்து கவி சரவணனுக்கு விவாகரத்து கொடுக்க மறுத்து வந்துள்ளார். இத னால் ஆத்திரத்திலிருந்த அவர் மகேஸ்வரியை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. மேலும், மகேஸ்வரியை கொலை செய்துவிட்டு குற்றத்தை ஒப்புக் கொண்டால், வழக்கு செலவு முழு வதையும் தான் பார்த்துக் கொள்வ தாகவும், தனக்கு சொந்தமாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கவி சேம்பர் என்ற செங்கல் சூலை யை சுரேஷ் பெயருக்கு எழுதிக் கொடுப்பதாக கவி சரவணன் ஆசை வார்த்தைகள் கூறி வாக்குறுதி கொடுத்ததும் தெரிய வந்தது. சுரேஷின் ஒப்புதல் வாக்கு மூலத்தை அடுத்து உடனடியாக தடாகம் போலீசார் அதிமுக நிர்வாகி யான கவி சரவணனை இரண்டா வது குற்றவாளியாக சேர்த்து, அவ ரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீ சார் கவி சரவணனை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி கோவை மத்திய சிறை யில் அடைத்தனர். விவாகரத்து தராத மனைவியை தனது ஓட்டுநர் மூலமாக கொலை செய்ததோடு, அதனை மறைத்து நாடகமாடிய அதிமுக நிர்வாகியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
