ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி, அரசு ரப்பர் கழகத்தை முன்னேற்ற நடவடிக்கை கலந்தாய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் பேச்சு
12 Jan 2026, 6:02 pm
<p><strong>ரப்பர் பால் உற்பத்தியை பெருக்கி, அரசு ரப்பர் கழகத்தை முன்னேற்ற நடவடிக்கை கலந்தாய்வுக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் பேச்சு</strong></p>
<p>நாகர்கோவில், ஜன.12- கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் கழகம் மற்றும் வனத்துறை யின் சார்பில் அரசு ரப்பர் கழக கூட்டரங்கில் தமிழக வனம் - கதர்துறை அமைச்சர் ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன் மற்றும் பால் வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் ஆகியோர் தலைமை யில் ஜனவர் 12 திங்களன்று கலந் தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.இராஜ கண்ணப்பன் துறை அலுவலர்களுடன் கலந்தா ய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் கீரிப்பாறை, காளிகேசம், பரளி யாறு, மணலோடை, மருதம் பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் ரப்பர் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இங்கு வசிக் கும் மக்கள் ரப்பர் பால் வெட்டும் தொழிலினை மேற்கொண்டு வரு கிறார்கள். அவர்களுக்கென அரசு ரப்பர் கழகம் துவக்கப்பட்டு, அவர்களின் தேவைகளை நிறை வேற்றி வருகிறது என்றார். அரசு ரப்பர் கழகத்தில் நடந்து வரும் முக்கிய பணிகளாகிய முதிர்ந்த ரப்பர் மரங்களை அகற்றி விட்டு புதிய ரப்பர் கன்றுகள் நடப் பட்டு வருகிறது. விரைவில் அரசு ரப்பர் கழகத்திலுள்ள மொத்த நிலப்பரப்பிலும் மரநடவு பணி கள் முடித்து, பால்வடிப்புக்கு கொண்டு வந்து உற்பத்தியை பெருக்கி, அரசு ரப்பர் கழ கத்தை மேலும் அதிக முன்னேற் றப்பாதைக்கு கொண்டு செல்ல துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டுகளில் இலாபமீட்டி யது போல தொடர்ந்து அதிக இலாபம் பெற உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறி வுறுத்தப்பட்டது. மேலும் தொழிலாளர் நலன் மற்றும் தற்காலிக தொழிலா ளர்களை நிரந்தரம் செய்வது தொ டர்பாக ஆலோசனை மேற்கொள் ளப்பட்டது. இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சரின் கவ னத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு ரப்பர் கழகத்தின் தற்போ தைய நிலை மற்றும் எந்தவித மான வளர்ச்சிப் பணிகளை கொண்டு வரலாம் என்பது குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப் பட்டது. குரங்குகளை பிடிக்க நடவடிக்கை வனப்பகுதியை ஒட்டிய பகுதி களில் குரங்கு தொல்லை இருப்ப தாகப் புகார்கள் வந்துள்ளன. இதைக் கட்டுப்படுத்த கூண்டுகள் வைத்துப் பிடித்து வனப்பகுதிக் குள் விட நடவடிக்கை எடுக்கப் படும்.‌ சிங்கவால் குரங்குகள் மலைப் பகுதிகளில் வசிப்பவை என்பதால், அவை மக்கள் வசிக் கும் பகுதிகளுக்கு வராது. வனப் பரப்பை அதிகரிப்பதில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது. ஒன்றியஅரசின் வழிகாட்டுத லின்படி 33 சதவிகித வனப்பரப்பு என்ற இலக்கை எட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தனியார் காடுகள் சட்டத்தினால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு மாநில உணவு ஆணை யத்தலைவர் என்.சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங் கோடு), நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் ரெ.மகேஷ், அரசு ரப்பர் கழக தலைவர் - நிர்வாக இயக்குநர் சதீஷ், பொதுமேலா ளர் அரசு ரப்பர் கழக பொது மேலாளர் டாக்டர் எச்.திலீப்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>
