விடியலைக் காட்டுது ஜெயமுடனே!
5 hours before

விடியலைக் காட்டுது ஜெயமுடனே!

குப்பனின் நிலத்துக்கு எவிக்க்ஷன் ஆர்டர்!குஷாலா ஜட்ஜு புன்னகைப்பார்!அப்பவே அறியலாம் அரசுக்கு சாதகமாதீர்ப்புவரும் ! இதுதான் நீதிதர்பார்!

ஈகாக் காயும் எந்திரிச்சி ஓடும்!கோர்ட்டில் நீதிபதி ஜபர்தஸ்து!தீநாக் காக தீர்ப்புவ ரும்அதுகுப்பனுக்கும் குப்பத்துக்கும் விஷவஸ்து!

சொல்லிவ ரேன்கேளு சோக மலையிலேபுலிசர ணாலயக் கேசுஇது!நல்லவர்! இயற்கையின் நண்பர்இவர்! வேண்டுவார்எலிசர ணாலயமும் வேணுமிண்ணு!

காட்டின் மகன்களை காட்டான் முரடன்கயவன்என் பார்நம்ம நீதிமகான்!பூட்டிவைக் கணுமாம்! அவர்களை அமுக்கிப்போடணு மாம்கழுத் துக்குலகான் !

மரம்செடி சருகு புலிகள் பூரான்வாழவே காடுகள் இருக்கணுமாம்!மாமாங்க மாய்அங்கு வாழும் மக்களைசகாராவுக்கு துரத்தணுமாம்!

சுரங்கம் தோண்டுறான் கருங்கல் நோண்டுறான்கார்ப்ப ரேட்டுக்கே காடுமலை !குரங்குப் பிடியாக வனத்தைப் பிடிக்கிறான்கோர்ட்டு தரும்இதுக்கு ஒப்புதலை!

மலைவா சிகளும் விலைவா சிகளும்சட்டத்துக்கு ஒரு பிரச்சனையா?மந்திரி மீது எறும்பு ஏறினால்மட்டுமே சட்டம்வரும் வக்கணையா!

ரேஷன் கடையிலே பத்தாக் குறை;எனினும்அரசு குடோனில் எலிவிருந்து!பாசம் பரிவுடன் நீதிமான் வைப்பார்புலிக்கும் டின்னர் மனம்மகிழ்ந்து!

புலிவரி போல பொதுஜனத் துக்குவரிபோடும் இந்த கவர்மெண்டுமலைக்குடி மக்களை ராணுவம் கொண்டுதுரத்தணு மாமே வெறிகொண்டு!

நீதிபதி யாரின் லாக்கர் பெட்டகம்போல்ஜொலிக் கணும்புலிக் காப்பகமாம் !நாதியின்றி வனமக்கள் செத்து ஜனத்தொகைகுறைவதும் இவருக்கு சம்மதமாம்!

மேதை வழங்கிய நீதிக்குப் பரிசாய்"மிருக மித்திரன் " என பட்டம்தந்தார்!சோழன் புலிக்கொடி இவரது காரிலும்பறந்திட மந்திரி சலுகைதந்தார்!

துரைமக னார்நம் நீதிபதி யார்பார்அமைச்சரின் திருட்டுக்கு உதவிஅப்பா !தரைதேயத் தவழ்ந்து வணங்கிப் பெறுவாருஓய்வின்பின் கவர்னரு பதவிஅப்பா!

பேஷா இப்படி நீதிபரி பாலனம்ராசா ஜட்ஜுதுரை செய்கையிலேசீசா யோகா மையத்தில் இருந்தொருசேதிவந் ததுஈ மெயிலினிலே!

ஷாம்பெயின் சுவைத்து சப்புக் கொட்டிக் கொண்டுஜட்ஜுதுரை சொல்கிறார் "ஆல்ரைட்டு!சட்டச்சிக்கல் வந்தாநான் பாத்துக்க றேன் நீங்கவி.வி.ஐ .பி ! ஃபுல்வெய்ட்டு!"

ஆனைவரும் தடத்தில் ஆசிரமம் கட்டியவர்சீசா யோகா மையகுரு!ஆதரவா குருக்கிவர் தீர்ப்பு சொன்னவர்! நம்மஜட்ஜுக்கும் உண்டு ஹைபவரு!

குப்பன்களைக் கண்டால் வனத்தின் சட்டம்குதிரைச் சவுக்காய் தாவுதப்பா!கும்பிடு போட்டு செல்வர்கள் உடலைமயிலிறகாக நீவுதப்பா!

வனச்சட்டத் தைச்செத்த பிணச்சட்டம் ஆக்கிடமெனக்கெட்ட கோர்ட்டுக்கு எதிராகபுறப்பட்டு வருகுது போர்படை செம்படை !புஜம்தட்டி பறைகொட்டி சினமாக!

கொடிஅசைந் தால்செங் கொடி அசைந் தால்செங்கோட்டையே அசைந்திடும் பயமுடனே!

விடிவெள்ளி யாய்கொடி நட்சத்திரம் பாருங்க!விடியலைக் காட்டுது ஜெயமுடனே!