கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் வனத்துறை அவசர எச்சரிக்கை!
9 Mar 2026, 4:24 pm
<p><strong>கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் வனத்துறை அவசர எச்சரிக்கை!</strong></p>
<p>தருமபுரி, மார்ச் 9- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகத்திற்குட் பட்ட கிராமப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிக ரித்துள்ளதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பாலக்கோடு வனச்சரகத்திற்குட்பட்ட அண்ணா மலைஅள்ளி காப்புகாட்டுப் பகுதியில் இருந்து வெளி யேறிய யானைகள், தற்போது பிக்கிலிமலை காப்பு காட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளன. இதன் காரண மாக, வனப்பகுதியை ஒட்டியுள்ள வத்திமரத்துஅள்ளி, கிட்டம்பட்டி, திருமல்வாடி, பழைய பாப்பாரப்பட்டி, பனைகுளம், சஞ்சீவிபுரம், காந்திபுரம், சொரக்காபட்டி மலையூர், ஆத்துக்கொட்டாய், பாப்பாரப்பட்டி நகரை ஒட்டியுள்ள சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் எச் சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையி னர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இரவு நேரங்களில் வயல் வெளிகளுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்வதை தவிர்க்க வேண்டும். வீட்டின் வெளிப்பகுதியிலோ அல் லது தோப்புகளிலோ கட்டில் போட்டு உறங்குவதை தவிர்த்து, பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். விளைநிலங்களில் சட்டவிரோதமாக மின் வேலி அமைப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அத்தகைய செயல்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் பகுதியில் யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடி யாக வனத்துறை வழங்கியுள்ள அவசரத் தொடர்பு எண் களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரி வித்துள்ளனர்.</p>
