முந்தய பக்கம்

குரங்குகளால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வனத்துறை ஆய்வு

21 Nov 2025, 5:11 pm
குரங்குகளால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வனத்துறை ஆய்வு
<p><strong>குரங்குகளால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களில் வனத்துறை ஆய்வு</strong></p> <p>உடுமலை, நவ.21- திருமுர்த்திநகர், வலையபாளையம், ராவணாபுரம் மற்றும் தேவனூர்புதூர் வருவாய் கிராமத்தின் விளை நிலத்தில் தென்னை மரங்களில் இளநீர், தேங்காய்களை குரங் குகள் சேதப்படுத்தி வருகின்றன. இச்சம்பவத்தில் வனத்து றையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டம் நடத்தப் படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர். இதைதொ டர்ந்து, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் குரங்கு களை பிடிக்க பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளிக்கிழமை வனத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து, கூண்டு வைத்தனர். &nbsp;மேலும், வன எல்லையில் இருக்கும் புதர்களை அப்புறப்ப டுத்தினர். இதுகுறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் வனத்துறை யில் ஆய்வு வரவேற்கத்தக்கது, விலங்குகள் விளைநிலங்க ளுக்கு உள்ளே வராமல் தடுக்கும் &nbsp;வகையில் சோலார் மின் &nbsp;வேலி மற்றும் அகலிகளை மலை அடிவாரத்தில் அமைக்க &nbsp;வேண்டும். வனத்தின் உள்ளே விலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் மற்றும் தடுப்பு அணைகள் கட்ட வேண்டும். உணவு கிடைக்கும் வகையில் பழ வகை மரங்களை நடவு &nbsp;செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram