தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வன விலங்குகளால் மலையோர மக்கள் அச்சம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வனத்துறை உதவி

5 Jun 2026, 11:02 pm
வன விலங்குகளால் மலையோர மக்கள் அச்சம்  அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வனத்துறை உதவி
<p><strong>வன விலங்குகளால் மலையோர மக்கள் அச்சம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வனத்துறை உதவி</strong></p><p>அருமனை, ஜூன். 5- குமரி மாவட்டம் களியல் வனச்சரகத்திற்கு உட்பட்ட வட்டப்பாறை பகுதியை சேர்ந்த ராஜேஷ் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னால் காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். இதனால் மலையோர கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். யானைகள் வனத்துக்குள் சென்றதாக உறுதி செய்யப்படவில்லை. ஏராளமான வன ஊழியர்கள் அப்பகுதியில் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது. எந்த அத்தியாவசிய பொருட்களும் வாங்குவதற்காக மக்கள் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளார்கள். இதைத் தொடர்ந்து காணி பழங்குடி மக்கள் பொருட்கள் வாங்குவதற்கும் மருத்துவ தேவைகளுக்கும் களியல் மற்றும் பத்து காணி ஆறுகாணி பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. வனவிலங்குகளாலும் தற்போது நடமாடும் யானைகளின் அச்சத்தாலும் மக்கள் வெளியே வரவில்லை. இது குறித்து தகவல் அறிந்த வனத்துறை அலுவலர் முகைதீன் மலை கிராம மக்களுக்கு உதவ முன்வந்தார். அதன்படி அச்சமின்றி ஆறுகாணி பகுதிகளுக்கு பாதுகாப்பாக சென்று வர வனத்துறை வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த அனுமதித்துள்ளார். வட்டப்பாறை பள்ளி அருகில் வனத்துறை வாகனம் நிறுத்தப்படுகிறது. களியல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல விரும்பும் மக்கள் வனத்துறை வாகனத்தில் ஏறி அத்தியாவசிய பொருட்களை வாங்கிவிட்டு திரும்பி வரும் வரைக்கும் வாகனம் நின்று, ஊரில் கொண்டு விடப்படுகிறார்கள். வனத்துறையின் இந்த உதவியை மலையோர மக்கள் பாராட்டினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.