தமிழக - கேரள எல்லையில் இறந்து கிடக்கும் பறவைகள் வனத்துறையினர்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>தமிழக - கேரள எல்லையில் இறந்து கிடக்கும் பறவைகள் வனத்துறையினர்</strong></p>
<p>ஆய்வு தேனி, பிப்.17- தமிழக கேரள எல்லையான கம்பம்மெட்டு அருகே அடுத்தடுத்து பறவைகள் இறந்து வருகின்றன. வனத் துறையினர் இவற்றை கைப்பற்றி பறவை காய்ச்சல் தாக்கமா என்று ஆய்வு செய்து வருகின்றனர். தேனி மாவட்டத்தின் தமிழக கேரள எல்லையாக நெடுங்கண்டம் சாலையில் பாறத்தோடு எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக காகங்கள் மற்றும் மாடப்புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் மர்மமான முறையில் இறந்து வரு கின்றன. குறுகிய தூரத்திலேயே பத்துக்கும் மேற்பட்ட பறவை கள் இறந்து கிடப்பது பலருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் தற்போது பறவைக் காய்ச்சல் அச்சுறுத் தல் இருந்து வரும் நிலையில், பறவைகள் இறந்து கிடந்த தால் இது பறவைக் காய்ச்சல் நோயின் அறிகுறியாக இருக்குமோ என இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பறவை களின் உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத் துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வந்த பிறகே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றனர்.</p>
