தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தருமபுரியில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை முடிவு

21 Mar 2026, 2:42 pm
தருமபுரியில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை முடிவு
<p><strong>தருமபுரியில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை முடிவு</strong></p> <p>தருமபுரி, மார்ச் 21- உலக வன நாளையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூலை - செப்டம்பர் மாதம் வரை 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய வனத்துறை முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டின் வனப்பரப்பை 23.7 சதவிகி தத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்தும் &nbsp;நோக்கோடு, தமிழ்நாடு பசுமை இயக்கத்தை, &nbsp;தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் கடந்த 2022 &nbsp;ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அடுத்த 10 &nbsp;ஆண்டுக்காலத்தில் நகர்ப்புற பகுதிகள், விவ சாயப் பண்ணைகள், கல்வி நிறுவனங்கள், கோயில் நிலங்கள், தொழிற்சாலைகள், ஏரிக் கரைகள் மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள், ஆற்று படுகைகள், பொது நிலங்களில் முக்கி யத்துவம் வாய்ந்த உள்ளூர் மர வகைகள் நடப் படும். இந்த இயக்கத்தின் கீழ், பொருளாதார &nbsp;முக்கியத்துவம் வாய்ந்த உயர்ரக மரங்க ளான சந்தனம், செம்மரம் மற்றும் ஈட்டி போன்ற மரங்களை வளர்க்க விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்கள். இயற்கை வளங் களை நிலையான முறையில் பயன்படுத்தி வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற உள் ளூர் சமூகங்களின் வருமானத்தை பெருக்க வும் இந்த திட்டம் உதவும். கடந்த ஆண்டு 10 &nbsp;லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு வைத்து பல லட்சம் மரக்கன்றுகள் மாவட்டத் தில் நடப்பட்டுள்ளது. வனம், அரசு அலுவல கம், பள்ளி, கல்லூரி வளாகம், விவசாய நிலங் களில் நடப்பட்டுள்ளது. இந்நிலையில், தருமபுரி மாவட்டம் முழு வதும் வனத்துறை சார்பில் உலக வன நாள் &nbsp;(மார்ச் 21) சனியன்று கொண்டாடப்பட்டு, &nbsp;ஆங்காங்கே மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி &nbsp;நடைபெற்றது. நடப்பாண்டு பள்ளிகளில் &nbsp;அரசு பொதுத்தேர்வு மற்றும் தேர்தல் விதி முறை அமலில் உள்ளதால், பள்ளி மாணவர் களுடையே மரம் வளர்ப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தள்ளி வைக்கப் பட்டுள்ளது. உலக வனநாளையொட்டி, தரும புரி மாவட்டத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நட வனத்துறை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் கூறுகையில், தருமபுரி மாவட் டத்தில் வனங்களின் பரப்பளவு 1716 சதுர கிலோ மீட்டர். இம்மாவட்ட காடுகள் கர்நா டகா, தமிழ்நாடு ஆகியவற்றின் எல்லைகள் சந்திக்கும் பகுதியில் அமைந்துள்ளது. தமி ழகத்தில் வனப்பரப்பு அதிகம் உள்ள 2 &nbsp;ஆவது மாவட்டமான தருமபுரியில், 38 சத விகித வனப்பகுதி உள்ளன. தருமபுரி காடுக ளில் பல்வேறு வகையான மரம், செடி, கொடி களும், பல்வேறு வகையான விலங்கு, பாம்பு, பறவைகளும் காணப்படுகின்றன. மாவட் டத்தில் வனப்பரப்பை அதிகரிக்கவும், வனப் பரப்பை அதிகரிக்கவும் உலக வனநாளை யொட்டி 6 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை &nbsp;மூலம் நடப்பட உள்ளது. இந்த பணி வரும் &nbsp;ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை &nbsp;நடக்கும், என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.