முந்தய பக்கம்

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த குரங்கை பிடிக்க வனத்துறை கூண்டு

12 Nov 2025, 3:20 pm
ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த  குரங்கை பிடிக்க வனத்துறை கூண்டு
<p><strong>ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்த&nbsp; குரங்கை பிடிக்க வனத்துறை கூண்டு</strong></p> <p>கோவை, நவ.12- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரி யும் குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண் காணித்து வருகின்றனர். கோவை மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள &nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மாவட்ட &nbsp;ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென வந்த குரங்கு &nbsp;ஒன்று கட்டிடங்களின் மீது ஏறி அங்கும் இங்கும் அலைந் தது. தொடர்ந்து ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறு &nbsp;தானிய உணவக வாயில் அருகே நீண்ட நேரம் இருந்த குரங்கு &nbsp;மூதாட்டி ஒருவரிடம் உணவை பறித்துச் சென்றது. இதனால் &nbsp;பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த வர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த &nbsp;வனத்துறை ஊழியர்கள் அங்குள்ள சிறுதானிய உணவகத் தின் அருகே குரங்கை பிடிக்க கூண்டு வைத்தனர். மேலும் &nbsp;குரங்கை உள்ளே வரவழைக்க பழங்களை வெட்டி கூண்டுக் குள் போட்டுள்ளனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram