விஜய் பிரச்சார பேருந்தில் தடயவியல், சிபிஐ அதிகாரிகள் ஆய்வு
10 Jan 2026, 2:48 pm
<p><strong>விஜய் பிரச்சார பேருந்தில் தடயவியல், சிபிஐ அதிகாரிகள் ஆய்வு</strong></p>
<p>கரூர், ஜன.10 - நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலை வருமான விஜய் மக்கள் பிரச்சாரத்தின் போது பயன்படுத்தப்பட்ட பேருந்தை ஒன்றிய அர சின் உள்துறை அமைச் சக மற்றும் தடய வியல் துறை, சிபிஐ அதி காரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர். கரூரில் கடந்தாண்டு செப்.27 ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச் சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110 பேர் காய மடைந்தனர். இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி கள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விஜய் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திய பேருந்து பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்காக வாகன ஓட்டுநருடன் கரூ ருக்கு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டது. கரூர் பொதுப் பணித் துறை சுற்றுலா மாளி கையில் தங்கியிருக்கும் சிபிஐ அதிகாரிகள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் தடயவி யல் துறை அதிகாரி கள் பேருந்தை பார்வை யிட்டு ஆய்வு செய்த னர். தொடர்ந்து பேருந்து ஓட்டுநரிடம் அதிகாரி கள் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஜன. 12ஆம் தேதி விஜய் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு சிபிஐ அதிகாரி சார்பில் சம்மன் அனுப்பப்பட்ட நிலை யில், தற்போது விஜய் பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணைக்கு உள் ளாக்கப் பட்டுள்ளது.</p>
