தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆட்டோவில் பயணம் செய்யும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தஞ்சை வருகை

1 Jan 2026, 2:48 pm
ஆட்டோவில் பயணம் செய்யும் வெளிநாட்டு  சுற்றுலா பயணிகள் தஞ்சை வருகை
<p><strong>ஆட்டோவில் பயணம் செய்யும் வெளிநாட்டு &nbsp;சுற்றுலா பயணிகள் தஞ்சை வருகை</strong></p> <p>தஞ்சாவூர், ஜன.1 - &nbsp;தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகை யில், வெளிநாட்டைச் சேர்ந்த 16 பெண்கள் உள்பட 29 சுற்றுலா பயணிகள், ஆட்டோவில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்கள் புதன்கிழமை தஞ்சாவூருக்கு வந்தனர். சென்னையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு, நமது கலாச்சாரங்களை அறிந்து வருகின்றனர். &nbsp;அதன்படி, தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை தெரிந்து கொள்ளும் வகையில் லண்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளைச் சேர்ந்த 16 பெண்கள், 13 ஆண்கள் என மொத்தம் 29 சுற்றுலா பயணிகள் இந்தியாவில் 1,500 கி.மீட்டருக்கு மேல் ஆட்டோவில் பயணம் செய்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்ள உள்ளனர். இதற்காக கடந்த டிச. 28 ஆம் தேதி சென்னைக்கு வந்தனர். அன்றைய தினம் சென்னையில் இருந்து 11 ஆட்டோக்களில் புதுச்சேரி மாநிலத்திற்குச் சென்றனர். கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்தனர். செவ்வாய்க்கிழமை இரவு &nbsp;தஞ்சையை வந்தடைந்தனர். புதன்கிழமை காலை அங்கிருந்து புறப்பட்டு, பெரிய கோவிலுக்குச் சென்றனர். அங்கு பெரிய கோவிலை சுற்றிப் பார்த்து வியந்தனர். &nbsp;தொடர்ந்து மதுரையில் பிரசித்தி பெற்ற இடங்களை பார்வையிட்டு தூத்துக்குடி, கன்னியாகுமரி வழியாக ஜன.6 &nbsp;ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்த புரத்தில் தங்களது பயணத்தை நிறைவு செய்கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.