ஓட்டம் பிடிக்கும் முதலீடுகள்!
yesterday
<p><strong>ஓட்டம் பிடிக்கும் முதலீடுகள்!</strong></p><p>பா.ஜ.க. அரசாங்கத்தின் மோசமான கொள்கைகள் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையான சவால்களையும், வளர்ச்சியில் தேக்கத்தையும் சந்தித்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் கணிசமாக வெளியேறி வருகின்றன. 2026ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் 2.67 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வெளியேறியுள்ளன. ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ரூ.42,927 கோடிகள் வெளியேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு ஆண்டில் பிப்ரவரி மாதம் (ரூ.22,615 கோடி உள்ளே வந்தது) தவிர, ஜனவரி (ரூ.35,962 கோடி), மார்ச் (ரூ.1,17,000 கோடி), ஏப்ரல் (ரூ.60,487 கோடி), மே (ரூ.32,963 கோடி) என அனைத்து மாதங்களிலும் முதலீடுகள் வெளியேறிய வண்ணமே உள்ளன. இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்கச் சந்தையின் லாபம் மற்றும் பிற நாடுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பெருகிவரும் முதலீடுகளே இதற்குக் காரணம். இந்தத் தொழில்நுட்பத்தில் சீனா, அமெரிக்காவைவிட இந்தியா பின்தங்கியுள்ளது. உருப்படியான திட்டங்கள் இல்லையெனில் முதலீடுகள் திரும்புவது கானல் நீரே.</p>
